எரிபொருளைக் கொண்டுவர பிரியமாலியிடம் இருந்து பணம் பெறவில்லை -எரிசக்தி அமைச்சர்
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண்ணிடம் இருந்து இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு பணமோ அல்லது பங்களிப்புகளோ பெறப்படவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்கான பணம் இலங்கை மத்திய வங்கியிடமிருந்தும் நாட்டிலுள்ள ஏனைய வங்கி முறைமைகள் ஊடாகவும் மட்டுமே பெறப்படுகிறது.
எரிபொருள் இறக்குமதிக்காக வேறு எந்த மூன்றாம் தரப்பினரிடமும் பணம் பெறவில்லை என்று அவர் கூறினார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை