கட்டண உயர்வுக்கு பின்னரும் மின்சார சபை இன்னும் நஷ்டத்தையே சந்தித்து வருகிறது

மின்சார கட்டண அதிகரிப்புக்குப் பின்னரும் இலங்கை மின்சார சபை 152 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக அமைச்சர் காஞ்சனா விஜேயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் அறிக்கை விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கள் நாட்டிலேயே மிகவும் வங்குரோத்து நிலையில் உள்ள நிறுவனங்கள் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்பவர் என அமைச்சரை முத்திரை குத்தினார்.

இந்த இழப்புகள் அதிகாரிகளால் ஏற்படவில்லை என்றும், நாட்டில் அரசியல் அதிகாரம் எடுத்துள்ள முறையற்ற முடிவுகளினால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.