கொழும்பை அச்சுறுத்தும் நபர்கள் – பொலிஸார் வெளியிட்ட புகைப்படங்கள்

அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிதுள்ளன.

 

போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ள நிலையில்,அதற்கு அடிமையானவர்களினால் அதிகளவான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில் கொள்ளையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள சிலரின் புகைப்படங்களை பிலியந்தலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

 

இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவும் கொள்ளைச் சம்பங்கள் அதிகரித்துள்ளன. இது குறித்து பொது மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.