உயிருக்காக போராடிக் கொண்டிருந்த ஐவர் பாணந்துறை கடலில் காப்பாற்றப்பட்டுள்ளனர்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

பாணந்துறை கடலில் நீராடிக் கொண்டிருந்த ஐவர் பாரிய கடலலையில் சிக்கி உயிருக்காக போராடிக்கொண்டிந்த வேளை பாணந்துறை பொலிஸாரும், கடற்படை உயிர்காப்பு படையினரும் காப்பாற்றியுள்ளனர்.

கடற்கரையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களும்,இரண்டு சிறுமிகளும் உள்ளடங்கலாக ஐவர் திடீரென கடலில் நீராடிக் கொண்டிருந்த வேளை சுமார் 40 மீற்றருக்கப்பால் தோன்றிய பாரிய கடலலை இவர்கள் ஐவரையும் இழுத்துச் செல்லப்படும் போது தங்களை காப்பாற்றமாறு கூக்குரல் இட்ட சத்தத்தில் கரையில் நின்று கொண்டிருந்த உயிர்காப்பு படை வீரர்கள் இவர்களை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்து முதலுதவி வழங்கி காப்பாற்றியுள்ளனர்.