கல்முனை வளைகுடா அமையத்தின் ஒன்றுகூடலும், விளையாட்டு நிகழ்வும்

(அஸ்ஹர் இப்றாஹிம்)

கடல் கடந்து தொழிலுக்காக கட்டார்  நாட்டுக்கு சென்றாலும் கட்டார் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு, அல் முன்தஸா பூங்காவில் மிகச் சிறப்பாக பொழுதுபோக்கு நிகழ்வு இடம்பெற்றது.

இந்  நிகழ்வில் பலூன்   உடைத்தல்,   யானைக்கு கண் வைத்தல், முட்டி உடைத்தல், சங்கீத கதிரை, சாக்கோட்டம், கயிறு இழுத்தல் போன்ற நிகழ்ச்சிகளுடன் சிறுவர்களுக்கான பல போட்டி நிகழ்ச்சிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இன,மத பேதங்கள் கடந்து, கட்டார் வாழ் கல்முனை உறவுகள் அனைவரும் ஒற்றுமையுடன் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.