உலக உணவு திட்டத்தின்கீழ் சம்மாந்துறையில் இரண்டாம் கட்ட நிவாரண பொதிகள் வழங்கல்!

சம்மாந்துறை நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்

உலக உணவுத் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தின் போது பாதிக்கப்பட்ட குடும்பங்களில்  இருந்து தெரிவுசெய்யப்பட்ட சுமார் 1262 குடும்பங்களுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் வெள்ளிக்கிழமை நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வின் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை புளக் து மேற்கு 01,02, சம்மாந்துறை 10,11,12, கருவட்டுக்கல் 01,02 , வீரமுனை 01,02,03,04 ஆகிய கிராம மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிவாரண பொதிகள் வழங்கும் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவை உத்தியோகத்தர் எஸ்.எம். எம் அஸாறுடீன், திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.என்.எம் சசீர், புவி, பிரிவுக்குப் பொறுப்பான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.