மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

 

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

மருதமுனை ஷஸ் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) தரம் 6 இற்கு புதிதாக இணைத்துக்கொள்ளும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் எம்.எம்.ஹிர்பகான் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது.

புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட மாணவர்களை, பேண்ட் வாத்தியம் இசைக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு புதிய மாணவர்களுக்கு தரம் 7 இல் கல்விகற்கும் மாணவர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டார்கள். இந்த நிகழ்வில் ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பிரதி அதிபர் எம்.பி.எம்.றாஜி, அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலையின் பொறுப்பதிபர் எம்.எல்.எம்.மஹ்றூப், அண்மையில் இப் பாடசாலையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட அதிபர்களான எம்.சிராஜ், ஏ.கே. பாரீஸ், உட்பட ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலர் இதில் கலந்து கொண்டனர்.

அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலையில் இருந்து சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஷம்ஸ் மத்திய கல்லூரியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.