அஸ்-ஸுஹறா பாடசாலை வித்தியாரம்ப விழா நிகழ்வு

பாறுக் ஷிஹான்

2024 ஆம் ஆண்டு தரம் 01 மாணவர்களை கல்முனை அஸ்-ஸுஹறா பாடசாலைக்கு   உள்வாங்கும்  வித்தியாரம்ப விழா வியாழக்கிழமை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம் அஸ்மி  ஏனைய  அதிதிகளாக ஈ.பி.எஸ்.ஐ  இணைப்பாளர் ஏ.றாசிக் உதவி அதிபர்களான எஸ்.ஜுனைதீன் எம்.ஏ.எப் .மிஸ்னா  ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வுகள் அனைத்தும்  பாடசாலை ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள்,அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவின் செயலாளர் பொறியியலாளர் எம்.ரி.எம் அனப் ,உறுப்பினர்களான ரி.எம். இர்பான்,எம்.ஜெ.எம் ஜெசில், எம்.எம்.எம்.ஜௌபர், எம்.எம் சமீறுல்லாஹி,  ஐ.ஹசீனா பானு , எல்.எம் சர்ஜுன் ,ஆகியோரின் பூரண ஒத்துழைப்புடன் மிகக் குறுகிய காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்று  முடிவடைந்தது.

இறுதியாக ஏடு துவங்கும் நிகழ்வுடன் அன்பளிப்புகள் பழைய மாணவர் எம்.எம்.எம்.ஸமுஹ்சீனின் அனுசரனையுடன் இடம்பெற்ற தோடு  சியானுதீன்(ஹாசிமி) அவர்களின் துஆ பிரார்த்தனையுடன்  இடம்பெற்றது. பிரதம அதிதி, கௌரவ அதிதிகள்,  விஷேட அதிதிகள் அனைவரும் ஆசிரியர்களுக்கான கௌரவிப்புகளையும் பாராட்டுக்களையும் வழங்கினர்.

அத்துடன் மாணவர் கலை நிகழ்வுகளுடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.