ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு தர்மபுரம் பொலிஸால் ஸ்டிக்கர் அணிவித்தல்!

தர்மபுரம் பொலீஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒழுங்குபடுத்தலில் தர்மபுரம் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளுக்கான ஸ்டிக்கர்கள் அணிவிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை நடைபெற்றது

இதன் போது ஓட்டோக்கான ஸ்டிக்கர் கட்டணமாக 400 ரூபாவும் மோட்டார் சைக்கிள்களுக்கான கட்டணமாக 250 ரூபாவும் அளவிடப்பட்டு இவர்களுக்கான ஸ்டிக்கர்கள் அணிவிக்கப்பட்டது.

ஸ்டிக்கர் அணிவிப்பதற்கான காரணம் குற்றச் செயல்கள் மற்றும்  விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காகவும் வீதி விபத்துக்கள் மற்றும் குற்ற செயல்களை இலகுவாக இனம் காண்பதற்கான  நடவடிக்கைகளுக்கு இலகுவாக அமையும் எனவும்  இதன் காரணமாக பாரிய அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் விபத்துக்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.