கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளை றிம்சான் நியமனம் பெற்றார்!

 

அபு அலா

கிழக்கு மாகாணத்தின் முதலாவது மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.றிம்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

2015ஃ2016 இல் கிழக்கு மாகாண மட்டத்தில் இடம்பெற்ற
சிறந்த உற்பத்தித்திறன் போட்டியில், மாகாண மட்ட மருத்துவ ஆய்வுகூட பிரிவில் முதலாம் இடத்தைப்பெற்று மாகாண மருத்துவ ஆய்வுகூட அத்தியட்சகராகப் பதவியுர்வு பெற்று அவருக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றுக்கொண்டார்.

அவர் தனது கடமையினை நாளை (திங்கட்கிழமை) களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் பொறுபேற்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.