கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை நலன்புரிசங்க பொதுக்கூட்டம்

( அஸ்ஹர் இப்றாஹிம்)

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் நலன்புரிச் சங்கப் பொதுக்கூட்டம் திங்கட்கிழமை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது நலன்புரிச் சங்கத்தின் 2024ஃ2025 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர்; சகீலா இஸ்ஸதீன் தலைவராகவும், வைத்தியர்; ஏ.எஸ்.எம்.பௌஸாத் உப தலைவராகவும், எம்.எஸ்.எம்.நியாஸ் செயலாளராகவும்,
எஸ்.பாஸ்கரன் பொருளாளராகவும் திருமதி எஸ்.சஞ்ஜீவன் உப செயலாளராகவும் , திருமதி எம்.எஸ்.வீ.வஜீதா, திருமதி என்.கவிதா, எஸ்.சிறிதரன், திருமதி எஸ்.இந்திரகுமார், எம்.ஏ.அபூபக்கர் (சாரதி) , எஸ்.ரீ.சித்தீக் ஆகியோர் நிருவாக சபை உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்