கற்பிட்டி கோட்ட அதிபர்களின் சேவை நலன் பாராட்டு விழா!

(கற்பிட்டி செய்தியாளர் சியாஜ்)

கற்பிட்டி கோட்டமட்ட பாடசாலை அதிபர்களின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள அதிபர்கள் மற்றும் இவ்வருடம் ஓய்வு பெற உள்ள அதிபர்களின் சேவைநலன் பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை புத்தளம் வலயக் கல்வி பணிமனையின் பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி காஞ்சலதா மற்றும் கற்பிட்டி கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி தீப்தி பெர்னாண்டோ ஆகியோரின் தலைமையில் கொய்யாவாடியில் அமைந்துள்ள மின்ஹாஜ் விடுதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கற்பிட்டி அல் அக்ஸா தேசிய பாடசாலையின் முன்னர் அதிபர் தரம் 01 தரம் பெற்ற ரோஸ் புஹாரியின் சேவையை பாராட்டி கௌரவிக்கும் முகமாக புத்தளம் வலயக்கல்விப் பிரதி பணிப்பாளர், கற்பிட்டி கோட்டக் கல்வி பணிப்பாளர் மற்றும் தில்லையூர் பாடசாலையின் அதிபர் ஆகியோரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார் என்பதுடன் அவர் இவ்வருடம் அதிபர் சேவையில் இருந்து ஓய்வு பெற உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.