உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களின் ஒன்றுகூடல் தென்கிழக்குப் பல்கலையில்!

நூருல் ஹூதா உமர்

இலங்கைத் துணைவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் குழு எனப்படும் இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் பணிப்பாளர்களின் 472 ஆவது ஒன்றுகூடல்; தென்கிழக்கு பல்கலைகழகத்தில் சனிpக்கிழமை சிவிசிடி இன் தலைவர் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சஞ்சீவணி கினிகதர தலைமையில் இடம்பெற்றது.

இன்றைய ஒன்றுகூடலின்போது பல்கலைக்கழகங்களில் காணப்படும் உள்ளக குறைபாடுகள் அவைகளை தீர்த்து வைப்பதில் கையாளப்படவேண்டிய வழிமுறைகள் முன்னெடுக்கப்படவேண்டிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டு தீர்வுகள் எட்டப்பட்டன.

இந்நிகழ்வின்போது அண்மையில் இடம்பெற்ற வெள்ளப்பெருக்கின் காரணமாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்துக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான வீடியோ ஆவணம் ஒன்று பங்குகொண்டிருந்த உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்களுக்கு காண்பிக்கப்பட்டு; உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

அதேவேளை குறித்த இடங்கள் சிலவற்றையும் அவர்கள் பார்வையிட்டனர்.

இங்கு கலந்து கொண்ட அதிதிகளால், இவ்வாறான அனர்த்தங்கள் தொடர்பில் எதிர்காலத்தில் கையாளப்படவேண்டிய நடைமுறைகள் பற்றி கருத்துக்கள் பரிமாறப்பட்ட அதேவேளை தாங்கள் முடிந்த உதவிகளை எதிர்காலத்தில் செய்வதாகவும் வாக்குறுதியளிக்கப்பட்டது