அம்பாறை பிரதேச செயலாளராக அனுருத்த பியதாஸ கடமையேற்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்)

அம்பாறை பிரதேச செயலக பிரதேச செயலாளராக இந்திக அனுருத்த பியதாஸ தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அம்பாறையில் பிறந்து அம்பாறை டீ.எஸ்.சேனநாயக தேசிய பாடசாலையில் கல்வி கற்ற இவர் உகன பிரதேச செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடமையேற்பு நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், நிர்வாக உத்தியோஸ்தர், கணக்காளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.