திருகோணமலையில் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்க்க ஆதரவளித்தல் செயலமர்வு

 

ஹஸ்பர் ஏ.எச்

ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி பங்களிப்பின் கீழ்; விழுது ஆற்றல் மேம்பாட்டு மைத்தின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் மற்றும் தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் எஸ.ஈ.டி.ஆர். நடைமுறைப்படுத்தும்  பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் என்ற செயலமர்வானது  மார்ச் 02,03 ஆம் திகதிகளில்   திருகோணமலையில் இரு நாள்களாக நடைபெற்றது.

இதில் இரு பிரதேச  சமூகங்களில் காணப்படும் பிரச்சினைகள் வெளிக்கொண்டு வரப்பட்டதோடு கூட்டு முயற்சியின் ஊடாக பிரச்சினைகளுக்கு எவ்வாறு நிகழ்வுத்தன்மையை ஏற்படுத்த முடியும் என்பதன் அடிப்படையில் இந்த செயலமர்வு இடம்பெற்றது.
இதில் இரு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட துறைசார் அரச உத்தியோகத்தர்கள், மத்தியஸ்த சபை உறுப்பினர்கள், விழுது இளையோர்கள் மற்றும் சமூகமட்ட செயற்பாட்டு குழுவினர் செயற்திட்ட முகாமையாளர் நசீர்  மற்றும்  செயற் திட்ட ஒருங்கினைப்பாளர் உவைசுல் கர்னி அத்தோடு விழுது ஆற்றல் மையத்தின்  திருகோணமலை மாவட்ட ஒருங்கினைப்பாளர்களான அபிவர்னா வர்ணகுலசிங்கம்,கிசாம் போன்றவர்களின்  பங்குபற்றலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.