கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதிக்கு 6.7 மில்லியன் ரூபா செலவில் காபெட்!

கிராமிய வீதிகள்  அபிவிருத்தி இராஜாங்க  அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவருமான கௌரவ சிவ. சந்திரகாந்தன் அவர்களின் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி மற்றும் அதனுடன் இணைந்ததாக சுயதொழிலை விருத்தி செய்வதற்கு பங்களிப்பு செய்யும் வீதிகளை இனம் கண்டு செப்பனிடும் பணிகள்  துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கோறளைப் பற்று பிரதேச செயலக பிரிவில் 16.7 மில்லியன் செலவில் 870ஆ நீளமான கண்ணகிபுரம் லயன்ஸ் கழக வீதி கார்பெட் வீதியாக செப்பனிடும் பணிகளை இராஜாங்க அமைச்சர் சிவ.சந்திரகாந்தன் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்திருந்தார்.

குறித்த வீதிக்கான ஆரம்ப பணிகளின் போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சியின் பிரதம பொருளாளர் ஆறுமுகம் தேவராஜ், கோறளைப் பற்று முன்னாள் தவிசாளர் சோபா ஜெயரஞ்சித், கட்சியின் கண்ணகிபுரம் கிராமிய குழு தலைவர் மோகன்ராஜ், கிராம சேவகர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், பொது மக்கள் என பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.(