இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு லைக்கா ஞானம் ஏற்பாட்டில் யாழில்!

சர்வதேச மகளிர் தினத்தினை கொண்டாடும் வகையில் 2024 மார்ச் 7 ஆம் திகதி லைக்கா ஞானம் அறக்கட்டளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின்  தொழில் வழிகாட்டல் பிரிவுடன் இணைந்து, இணைய பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு விரிவுரை நிகழ்வொன்றை பல்கலைக்கழக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில்  ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 200 இளங்கலை பட்டதாரிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதைக் காணக்கூடியதாக அமைந்தது.

தற்போதைய காலகட்டத்தில் இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் இணையப் பயன்பாடுகளூடு ஏற்படும் பாதிப்புகள் முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்துள்ளன. குறிப்பாக பதின்ம வயதுப் பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இந்த அமர்வானது இணையப் பாதுகாப்பு தொடர்பான டிஜிற்றல் கல்வியறிவு மற்றும் இணையத்தை இயங்கக்கூடிய திறன்களைக்  கொண்ட இளம் பெண்களை உருவாக்குவதும்  ஒன்லைன் அச்சுறுத்தல்கள் மற்றும் பாதிப்புகள்  பற்றிய தெளிவூட்டல்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இவ் நிகழ்வு அமைந்திருந்தது.

இளம் சமுதாயத்தின் எண்ண ஓட்டத்தில் டிஜிற்றல் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பான ஒன்லைன் சூழலை பற்றிய எண்ணப்பாட்டை வளர்ப்பது தொடர்பான முயற்சியில் லைக்கா ஞானம் அறக்கட்டளை தனது உறுதிப்பாட்டை பிரதிபலித்து நிற்கிறது. இணையப் பாதுகாப்பு மற்றும் அவற்றால் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் லைக்கா நிறுவனத்தின் சமுதாய அக்கறை பல்கலைக்கழக சமூகத்தின் இடையில் பாரிய வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்வின் வெற்றியை மேலும் வலுப்படுத்தும் வகையில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இதுபோன்ற நிகழ்வுகளை ஒழுங்கமைத்து  இளைஞர்களுக்கு டிஜிட்டல் கல்வியறிவை வழிமுறையாக வழங்குவதை நோக்கமாக கொண்டு அமைந்துள்ளது.