தமிழ்க் கந்தையா வித்தியாலயத்துக்கு சுன்னாகம் லயன்ஸ் கழகத்தால் உதவி!

சுன்னாகம் லயன்ஸ் கழகத்துக்கு ஆளுநரின் உத்தியோக வருகை அண்மையில் கந்தரோடையில் சுன்னாகம்; லயன்ஸ் கழகத் தலைவர் லயன் செ.விஜயராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாவட்டம் 306 பி1 இன் ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர் – லயன் சாவித்திரி பீற்றர் தம்பதிகள் பிரதம விருந்தினர்களாகவும் லயன் தேவா டி பீற்றர் – லயன் ஜெசிந்தா தம்பதிகள் சிறப்புவிருந்தினர்களாகவும்  கலந்துகொண்டனர்.

இந்த நிpகழ்வில் கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாலயத்துக்கு வகுப்பறை ஒன்றுக்கு வர்ணம் தீட்டுவதற்கு 3 வாளி பெயின்ற் வழங்கப்பட்டது.