கடையாமோட்டை தேசிய பாடசாலயில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்)

புத்தளம் – தெற்கு கோட்டத்துக்குட்பட்ட கடையாமோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) யில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு  கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையின் தரம் 6,7 பகுதித் தலைவர் எம்.எம். பைஸல் ஆசிரியரின் நெறிப்படுத்தலில்  இடம்பெற்றது.

பாடசாலையின் அதிபர் எம்.எச்.எம். தௌபீக்கின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளரும், முந்தல் – மதுரங்குளி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத் தலைவருமான ஏ.எச்.எம். ஹாரூன், கல்வி அபிவிருத்திக் குழு செயலாளர் சீ.எம்.எம். தாவூத், பழை மாணவர் சங்க செயலாளர் ஜே.எம். ஜெஸீர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

தரம் – 6 புதிய மாணவர்களை தரம் – 7 மாணவர்கள் பூச்செண்டு மற்றும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி வரவேற்றனர்.

இதன்போது பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்  இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது