இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு நடந்தது!

காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவையின் ரஜத ஜெயந்தி மாபெரும் மாநாடு ஞாயிற்றுக்கிழமை ஹில்டன் ஹோட்டலில்  நடைபெற்றது. இந்த ஆண்டு மாநாடு 25 ஆவது முறையாக நடைபெற்றது.

காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில் முனைவோர் பேரவை மார்ச் 10, 1999 இல் ஆரம்பிக்கப்பட்டது. ‘இன்றிலிருந்து முழு மனதுடன் தயாராவோம்’ என்பதே இந்த ஆண்டு ரஜத ஜெயந்தியின் கருப்பொருளாக அமைந்துள்ளது.

அத்துடன் இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையில் அங்கம் வகிக்கும் நிறுவனங்கள் வருடாந்தம் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பில்லியன் கணக்கான ரூபாவை வழங்குகின்றன.
இலங்கையின் இளம் தொழில்முனைவோர் பேரவையின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், நாட்டிற்கு இன்றியமையாத அந்நியச் செலாவணியைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்றுமதியாளர்களாக உள்ளனர்.
மேலும் நாட்டின் பொருளாதாரத்தின் மறுமலர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு இன்றியமையாத சர்வதேச முதலீடுகள், வர்த்தகங்கள் மற்றும் கூட்டாண்மைகளை வைத்துள்ளனர்.

இங்கு புதிய தலைவர் துஷிர ரதெல்லவுக்கு காய்ல் அல்லது இளம் இலங்கை தொழில்முனைவோர் பேரவையின் முன்னாள் தலைவர் ரசித் விக்ரமசிங்க புதிய பதவியை வழங்கியமையைக் காணலாம்.