ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் கொள்வனவுக்கு 6 முதலீட்டாளர்கள் முன்நிற்ப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கான ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மூன்று முதலீட்டாளர்கள் உட்பட 6 முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையான AirAsia மற்றும் இலங்கையில் இயங்கும் Fitz Aviation ஆகியவை இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கொள்வனவு செய்வதற்கு கோரப்பட்டுள்ள ஏலத்தில் விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விபரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் இயங்கும் அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு நேற்று வெளியிட்டது.