பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

புத்தாண்டு விடுமுறை நிறைவடைந்து இன்று முதல் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்த வருடத்தின் பாடசாலை முதலாம்  தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகி அடுத்த மாதம் 03 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

முதலாம் தவணையின் மூன்றாம் கட்டம் அடுத்த மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

அத்தோடு, சாதாரணத்தர பரீட்சை  மே மாதம் 06 முதல் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.