கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த காலப்பகுதியில், 138 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் 62,162 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பதோடு, 17,460 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

மேலும் ஊரடங்கு உத்தரவை மீறியமைக்காக 18,992 நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.