பல்கலைக்கழகங்களின் ஓய்வூதியத்தினை பெறும் ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பணியாளருக்கான ஓய்வூதியமானது சீரான முறையில் மறுசீரமைக்கப்படாமை காரணமாக மிகக்குறைந்தளவிலான ஓய்வூதியத்தினை பல்கலைக்கழக பணியாளர்கள் பெற்றுகொள்வது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஒன்றினை யாழ்ப்பாண பல்கலை கழக ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

யாழ்.பல்கலை கழக ஊழியர் சங்க பணிமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

அது தொடர்பில் ஊழியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில், ஓய்வுபெற்ற பல்கலைக்கழக பணியாளருக்கான ஓய்வூதியமானது சீரான முறையில் மறுசீரமைக்கப்படாமை காரணமாக மிகக்குறைந்தளவிலான ஓய்வூதியத்தினை பல்கலைக்கழக பணியாளர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

1999இல் ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கொருமுறை மீளாய்வு செய்யப்படும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு கூறியிருந்த பொழுதிலும் இற்றைவரை எம்மீளாய்வு ஏதும் செய்யப்படவில்லை.

இது தொடர்பில் ஆராய்வதற்கு பல்கலைக்கழகத்திலிருந்து ஓய்வுபெற்றுச் சென்ற பல்கலைக்கழகங்களின் ஓய்வூதியத்தினை பெறும் ஆசிரியர்களையும் ஊழியர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேவேளை கலந்துரையாடலில் பங்கு பற்ற வருவோர், உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிப்பதுடன் முகக் கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியையும் (இரு நபர்களிற்கிடையிலான குறைந்தபட்ச தூரம் 03 அடி) கடைப்பிடித்தல் அவசியமானதாகும் என குறிப்பிடப்படுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.