வடிகான்களில் குளியலறை, சமையலறை கழிவு நீரை விடுவோருக்கு எச்சரிக்கை – ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக்…

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் வழிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குளியலறை மற்றும் சமையலறை கழிவு நீரை சட்ட விரோதமான முறையில் வெளியேற்றுபவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கோறளைப்பற்று மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கழிவு நீரை வடிகான்களில் விடுவதினால் சுற்றுச் சூழல் பாதிப்படைந்து காணப்படுவதோடு, டெங்கு பெருகும் சுழலும் உருவாகிறது.

எனவே, குறித்த செயற்பாட்டை மேற்கொள்வோர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான செயற்பாட்டை மேற்கொள்வோர் கண்டுபிடிக்கப்பட்டால் 1987ம் ஆண்டு 15ம் இலக்க பிரதேச சபை சட்டத்தின்படி சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.