கந்தளாயில் இரசாயன பசளை நிலையம் மற்றும் முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு.

திருகோணமலை மாவட்டத்தின்  கந்தளாயில் இரசாயன பசளை நிலையம் மற்றும் முகாமைத்துவ நிலையத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று(10) கந்தளாய் பிரதேச சபையின் தவிசாளர் சமன் ஏக்கநாயக்க தலைமையில் நடைபெற்றது.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி விவகாரங்கள் இராஜங்க அமைச்சின், உள்ளூர் மேம்பாட்டு ஆதரவுத் திட்டத்தின் மூலம் எட்டுக்கோடியே 97,00000இலட்சம் ரூபாய் செலவில் இவ் இரசாயன பசளை நிலையம் மற்றும் முகாமைத்துவ நிலையம் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான அடிக்கல்லினை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கபில அத்துக்கோரலவினால் நட்டப்பட்டதோடு,பெயர் பலகையும் திறை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியோக செயலாளர்,உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இதன் போது அதிதிகளினால் மரக்கன்றுகள் வைக்கப்பட்டது.
(அப்துல்சலாம் யாசீம்)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.