1010 போதை மாத்திரைகளை வைத்திருந்தவருக்கு அபராதம்

திருகோணமலை-மூன்றாம் கட்டை பகுதியில் 1010 போதை மாத்திரைகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு 75,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க  முன்னிலையில் இன்று (12) வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய  மருந்துகள் ஓழுங்கு படுத்தும் அதிகார சபையின் அனுமதிப்பத்திரம் பெறாமல் PREGAZIN 150 என்ற வர்த்தக பெயர் கொண்ட மாத்திரைகளை  தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த எட்டாம் மாதம் மூன்றாம் திகதி விசேட அதிரடிப்படையினரினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டு திருகோணமலை  தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கபட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இச்சந்தேக நபர் பாமசி ஒன்றினை நடாத்தி வருபவர் எனவும் குறித்த மருந்துகளை கொண்டு செல்லும்போது அனுமதிப்பத்திரம் இருக்கவில்லை எனவும் தெரியவருகின்றது.
ஆனாலும் குறித்த மருந்துகள் தொடர்பில் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந்தின் வழிகாட்டலுக்கு அமைவாக பிராந்திய உணவு மருந்து பரிசோதகர் ஆர்.முகுந்தன் அவர்களினால் திருகோணமலை நீதிமன்றில் மீட்கப்பட்ட மருந்துகள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன்  குறித்த மருந்து PREGAZIN 150 என்று வர்த்தக பெயர் கொண்டது எனவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை குறித்த மருந்தை எடுத்துச் செல்லும் போது அனுமதி பத்திரம் இல்லை எனவும் அதனால் குறித்த நபருக்கு 75,000 ரூபாய் தண்டம் செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாத கால சாதாரண சிறை தண்டனை வழங்குமாறும் திருகோணமலை பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க கட்டளையிட்டார்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.