பளை பிரதேச சபையால் மரநடுகை செயல்திட்டம் ஆரம்பம்…

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேசசபையால்  இன்று  மரநடுகை மேற்கொள்ளப்பட்டது.
பளை பிரதேசத்தின் A9 நெடுஞ்சாலையின் இரு மருங்குகளிலும் மேற்கொள்ளபடவிருக்கும்   குறித்த செயல் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு  பளை வைத்தியசாலை முன்பாக ஏ9வீதி அருகே இன்று காலை 11.00 மணிக்கு தவிசாளர் தலைமையில்  இடம்பெற்றது.
 இந் நிகழ்வில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன்  கருத்து தெரிவிக்கையில் சபையின் எல்லைக்குள் 5000 மரங்களை நான்கு வருடங்களில் நாட்ட திட்டமிட்டிருப்பதாகவும்  அதில் ஆயிரம் மரங்கள் நாட்டப்பட்டுள்ளதாகவும்  தொடர்ச்சியாக இந்த நடவடிக்கை தொடரும்  எனவும் தெரிவித்தார்

இந்நிகழ்வில்  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப தவிசாளர் கஜன் மற்றும்  பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்  செயலாளர், மற்று சபை உறுப்பினர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.