யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிப்பு…

அப்துல்சலாம் யாசீம்)

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள் கையளிக்கும் நிகழ்வு  திருகோணமலை-கரடிப்பூவல் பகுதியில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு இன்று (06)  மக்கள் சேவை மன்றத்தின் தலைவர் எம்.ரீ.ஏம்.பாரிஸ் தலைமையில் நடைபெற்றது.
வன்னி போர்க் அவுஸ்திரேலியா நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளை மணல் கிராமசேவகர் பிரிவிற்கு உட்பட்ட கரடிப்பூவல்  எனும் பின்தங்கிய கிராமத்தில் வசித்து
வருபவர்களுக்கு முதற்கட்டமாக இவ்வீடுகள் வழங்கிவைக்கப்பட்டது.
இவ்வீட்டினை திருகோணமலை மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் பயனாளிகளிடம் கையளித்தார்.
நீண்டகாலமாக அடிப்படை வசதிகள் இன்றி பாதுகாப்பற்ற களிமண் வீடுகளில் வாழ்ந்து வந்த குறித்த குடும்பங்களுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தொண்டு நிறுவனமான வன்னி ஹோப் நிறுவனத்தின் ஊடாக வீடுகள் மட்டுமல்லாது  மலசலகூடம் குடிநீர் வசதி,மின் இணைப்புகள் போன்ற அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் திருகோணமலை மாவட்ட செயலகத்தின் சமூகசேவைகள் உத்தியோகத்தர் கே.சுகந்தினி திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் எம். நௌபர் மக்கள் சேவை மன்றத்தின் திட்டப் பணிப்பாளர் கே.
தவசீலன் உள்ளிட்ட கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வன்னி  ஹோப் அவுஸ்திரேலியா நிறுவனம்- திருகோணமலை மக்கள் சேவை மன்றத்துடன் இணைந்து மாவட்டத்தில் பல மனிதாபிமான அபிவிருத்தி பணிகளை ஆற்றி வருகின்றமையையிட்டு பாராட்டுவதாகவும், பல உதவிகளை தேவையுள்ள மக்களுக்கு செய்ய முன்வரும் போது தாம் அதற்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இதன்போது உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன் குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.