சீரற்ற காலநிலை காரணமாக அம்பாறை, மாவட்டத்தில் தாழ் நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கின!

அம்பாறை, மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடந்த சில தினங்களாக அடை மழை பெய்து வருகின்றது இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மாவட்டத்தில் சில பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வீதிகள் சில நீரில் மூழ்கி காணப்படுகின்றது இதனால் வீதிகளில் பயணம் மேற்கொள்ளும் பொது மக்கள் சிரமத்தை எதிர் நோக்கினர் ..

மேலும் தாழ் நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதுடன் ,கல்முனை ,பாண்டிருப்பு ,மருதமுனை சாய்ந்தமருது ,காரைதீவு ,நிந்தவூர் ,சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் உள்ள தாழ் நில வயல் நிலங்களுக்கும் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதை காணக்கூடியதாகவுள்ளது .

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.