( வீடியோ) மட்டு- மாவட்டத்தில் மழை காரணமாக பதினையாரித்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிப்பு !

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட பகுதியில் பதினையாரித்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை திணைக்கள பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ.ரசீட் தெரிவித்தார்.

தொடர் மழை காரணமாக ஆறு பெருக்கெடுத்தமையினால் புணாணை அனைக்கட்டின் ஊடாக நீர் செல்வதாலும், சிறிய குளங்களில் நீர் மட்டங்கள் அதிகரித்து காணப்படுவதாலும் ஐயாயிரத்துக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டு நீரில் மூழ்கி காணப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

குளங்கள், அணைக்கட்டுக்கள் மூலம் வரும் நீரினால் வயல் நிலங்கள் ஆறு போன்று காட்சியளிப்பதுடன், நீரின் ஓட்டம் அதிவேகத்தில் செல்வதைக் காணக் கூடியதாக உள்ளது. இதன் காரணமாக வயல் பிரதேசங்களில் வாழும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் சில விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் தங்கள் பகுதியில் இருந்து வேறு இடங்களுக்கு செல்வதற்கு பாரிய சிரமங்களுக்கு மத்தியில் வயல் நிலங்கள் ஊடாக தோணியில் பயணம் செய்து வெள்ள நீர் இல்லாத இடங்களுக்கு செல்வதை அவதானிக்க முடிகின்றது.

புணாணை அணைக்கட்டின் பத்து வான் கதவுகள் பத்து அடி வரை திறக்கப்பட்டுள்ள காணப்படுவதுடன், நீரின் வேகம் அதிவேகத்தில் செல்வதை அவதானிக்க முடிகின்றது. அத்தோடு இதன் நீர் ஓட்டமாவடி பாலம் ஊடாக செல்வதால் குறித்த பகுதியை அண்டிய மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.