யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் விபத்து – மூவர் படுகாயம்!
யாழ். நகரப் பகுதியில் இலுப்பையடிச் சந்திக்கு அருகில் நேற்றிரவு(வியாழக்கிழமை) இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்துச் சபையின் வென்னப்புவ சாலைக்குச் சொந்தமான பேருந்தும் ஒன்றும், கார் ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கார் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. விபத்தை அடுத்து பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் புகுந்துள்ளது.
இதன்போது வீதியில் நின்ற ஒருவர், காரின் சாரதி, பேருந்தின் சாரதி ஆகியோரே காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை