வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழப்பு
கடந்த வாரத்தில் மாத்திரம் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஜனவரி 17ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் பதிவான 427 வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதுடன், 90 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிள் விபத்துக்களிலேயே சிக்குண்டவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 05 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், கடந்த வாரத்தில் சுமார் 500 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை