வவுனியா உண்ணாவிரதத்துக்கு நீதிமன்றம் தடை

வவுனியாவில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் சுதந்திரதினமான நாளை (04) முன்னெடுக்கப்படவிருந்த அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டத்துக்கு, வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து,  குறித்த போராட்டத்தை ஏற்பாடு செய்தி்ருந்த வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு, குறித்த தடை உத்தரவு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகரால், இல15 குற்றவியல் நடவடிக்கை சட்ட கோவை பிரிவு 106 (1)இன் படி, வவுனியா  நீதிமன்றத்தில் இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதை ஆராய்ந்த நீதிமன்றம், சண்முகராஜ் சறோஜாதேவி. சிவநாதன் ஜெனிற்றா, காசிப்பிள்ள. ஜெயவனிதா, கிறிஸ்தோப்பு கிருஸ்ணன்டயஸ் இராசமடு ஆகியோருக்கு, எதிர்ப்பு நடவடிக்கையையோ, ஆர்ப்பாட்டத்தையோ, நடைபவனியையோ முன்னெடுப்பதற்கான தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்குறிப்பிட்டவர்களை, பெப்ரவரி 15ஆம் திகதி  காலை 09 மணிக்கு, நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.