இதுவரையில் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார்.
தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைத்த பின்னர் சீனாவில் தயாரிக்கப்பட்ட 3 இலட்சம் தடுப்பூசி மருந்தை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முதலாவது கட்டத்தின் கீழ் சுகாதார ஊழியர்களுக்கும் முப்படை உறுப்பினர்களுக்கும் இந்த தடுப்பூசி வழங்கப்படுகின்றன. இதன் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு அதாவது 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 60 வயதுக்குட்பட்ட அடையாளம் காணப்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்துக்களேதுமில்லை