நோனாகம நீரியல்வளப் பூங்கா பிரதமரினால் திறந்துவைப்பு!

நோனாகம வோடர்பார்க் நீரியல்வளப் பூங்கா  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று ( 27) பிற்பகல் திறந்துவைக்கப்பட்டது.

தென் மாகாண சுற்றுச்சூழல் அமைச்சு, ருஹுணு சுற்றுலா பணியகம் மற்றும் அம்பலந்தொட பிரதேச சபையின் நிதி மற்றும் வளங்களை பயன்படுத்தி ரூபாய் 58 இலட்சம் செலவில் இந்த நீரியல்வளப் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அம்பலந்தொட பிரதேச சபையின் தலைவர் எம்.ஆர்.பி.தர்ஷன சஞ்ஜீவ அவர்களின் எண்ணக்கருவிற்கமைய கதிர்காமம்-ஹாஃப்வே திட்டத்தின் மற்றொரு கட்டமாக இந்த பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதில் நடைபாதை மற்றும் சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொதுமக்களை கவரும் பல இடங்கள் காணப்படுகின்றன.

குறித்த நிகழ்வில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் டீ.வீ.நானக, பாராளுமன்ற உறுப்பினர்களான அஜித் ராஜபக்ஷ, உபுல் கலப்பத்தி, தென் மாகாண ஆளுநர் விலி கமகே, தென் மாகாண சபையின் தலைவர் சோமவங்ஷ கோதாகொட, அம்பலந்தொட பிரதேச சபை தலைவர் எம்.ஆர்.பீ.தர்ஷன சஞ்ஜீவ உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.