துஆக்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது : தலைவர் றிசாத் விடுதலை பெற்றமை உத்வேகமளிக்கிறது – கல்முனை மாநகரசபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன்

கட்டாந்தரையிலும், நுளம்புக்கடிகளுக்கு மத்தியிலும் வேதனைகளை அனுபவித்த அ.இ.ம.கா. தலைவர் றிசாட் பதியுதீன், தன்னுடைய தம்பி, துணைவி, மாமனார் என அனைத்து சொந்தங்களையும் குற்றச்சாட்டுக்களுக்கும், சிறைக்கும் பலியாக்கிய வெதனங்கள் அனைத்தையும் ஒருங்கே அனுபவித்து பிணையில் சிறை மீண்டிருக்கின்றார் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன் அவருடைய அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் பிணையில் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக இருக்கிறது.   எந்தவித ஆதாரமும் அற்ற குற்றச்சாட்டுகளுடன் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழும், இஷாலினி தற்கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டிருந்த தலைவர் றிசாட் பதியுதீன் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார் .
கடந்த ஏப்ரல் மாதம் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட தலைவர் றிசாட் பதியுதீன் சிறையில் பல்வேறு இன்னல்களுக்கும் முகங்கொடுத்து, சிறுநீர் கழிப்பதற்காக, தொழுகையை நிறைவேற்றுவதற்காக ஒரு போத்தல் தண்ணீரை மாத்திரமே பயன்படுத்தியதாக எதிர் கட்சியின் பிரதான கொரடா லக்ஸ்மன் கிரியெல்ல பாராளுமன்றிலே பேசிய விடயம் இங்கு கவனிக்கப்பட வேண்டியது.

தலைவருடைய எதிர்கால கட்சி நடவடிக்கைகளை மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கிடக்கிறார்கள். இத்த வேளையிலே தலைவரின் விடுதலைக்காக பிரார்த்தித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் தாய்மார்கள், சகோதரர்கள், தலைவரின் விடுதலைக்காக முன்னின்று உழைத்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், சட்டத்தரணிகள், தலைவருக்காக குரல் கொடுத்த மாநகர, பிரதேசபை , முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக கல்முனை மாநகரசபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன் இதன் போது மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.