ஒரு தாயின் 10 ரூபா பணத்தை முதலீடாக வைத்து பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளேன்-முசாரப் எம்.பி

ஒரு ரூபா பணமும் இல்லாமல் - ஒரு தாயின் 10 ரூபா உட்பட மக்களின் பணம் மற்றும் பங்களிப்பின் மூலம் - மிகப்பெரும் பணக்கார வேட்பாளர்களை எதிர்கொண்டு எம்பியானவன் நான் என தன்னை உதாரணம் காட்டி - மாணவர்களுக்கு உற்சாகம் ஊட்டி  ...

மேலும்..

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் விசேட அறிவிப்பு

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்று (07) மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க தெரிவிக்கையில், களுத்துறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 17 உள்ளுராட்சி மன்றங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என்றார். கண்டியில் ...

மேலும்..

செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்..

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது. போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை மின்நிலையத்தில் ...

மேலும்..

தமிழரசு, ரெலோ, புளொட் தனித்தனியாகப் போட்டி!

* பரப்புரை மேடையில் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசக் கூடாது * தேர்தலின் பின் சபையில் இணைந்தே ஆட்சியமைக்க வேண்டும் - மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் தமிழரசு யோசனை - கூட்டமைப்பின் பங்காளிகளுடன் பேசி இறுதி முடிவு நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 8 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் உற்சாகமும் பெருக்கெடுக்கும். துணிச்சலு டன் செயல்படுவீர்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். இளைய சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். கணவன் - மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த ...

மேலும்..

இலங்கை பிரங்கி படையனியின் பிரிகேடியர் 24வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக விபுல சந்திரசிறி…

இலங்கை பிரங்கி படையனியின் பிரிகேடியர் விபுல சந்திரசிறி அவர்கள் பிறந்திருக்கும் புதிய ஆண்டு 2023 ஜனவரி 01ம் திககி தனது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் அம்பாறையில் இயங்கும் 24வது படைப்பிரிவு தலைமையகத்தின் புதிய தளபதியாக கடமைகளை பொறுப்பேடுக்கும் முகமாக உகந்தை ...

மேலும்..

புரியாணி சாப்பிட்ட யுவதி மரணம்

புரியாணி உணவான மந்தி புரியாணியை சாப்பிட்ட பின்னர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த யுவதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் கேரளா மாநிலத்தில் நடந்துள்ளது.   20 வயதான அஞ்சு ஸ்ரீபார்வதி என்ற யுவதியே இவ்வாறு இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். கேரளாவின் காசர்கோடு ...

மேலும்..

ஒரு வாரத்தில் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா! எடுக்கப்படவுள்ள நடவடிக்கை

மின் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்தால், ஜே.வி.பி பாரிய தொழில் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என அதன் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சிங்கள வார இறுதிப் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு ...

மேலும்..

பொகவந்தலாவையில் அறையொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் மேற்பிரிவு தோட்ட 08 ஏ இலக்க தேயிலை மலைப் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர்களின் ஓய்வு அறையொன்றிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் மேல்பிரிவு தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான அங்கமுத்து ...

மேலும்..

போதைப்பொருளை தடுப்பதற்கு எதிராக ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக பூரண அதிகாரம் கொண்ட செயலகத்தை நிறுவுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரம் பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியை பலப்படுத்துவதற்காக இந்த விசேட அலுவலகம் நிறுவப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் ...

மேலும்..

தண்டவாளத்தில் கழுத்தை வைத்து தற்கொலை செய்துக்கொண்ட இளைஞன்

மாத்தறை காளிதாஸ வீதியில் உள்ள தொடருந்து கடவை பகுதியில் தண்டவாளத்தில் கழுத்தை வைத்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று பிற்பகல் நடந்துள்ளது.   கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி சென்ற தொடருந்து இளைஞனின் கழுத்தின் மீது ஏறியதில் அவர் உயிரிழந்துள்ளார். ...

மேலும்..

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் ஏற்பட்டுள்ள சர்ச்சை!

யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவானது யாழ்ப்பாணத்தவர்களுக்குரியது இல்லை என இயக்குனர் அனோமா பொன்சேகா காட்டமாக தெரிவித்துள்ளார். " யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழா" எனும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த 2ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (06.01.2023) யாழ். பல்கலைக்கழக கைலாசபதி ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பானது வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவிப்பு

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது. களுவாஞ்சிகுடியில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இன்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில் ...

மேலும்..

வெருகலம்பதி இந்து மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்களினால் கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு…

இணைந்த கரங்கள் அமைப்பினால் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வானது 07/01/2023 காலை 11.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.சித்திரவேல் கமலேஸ்வரன் தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. அதிபர் கருத்து தெரிவிக்கையில் தரம் 6 தொடக்கம் 9 வரையான ...

மேலும்..

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் தபால் பெட்டி சின்னத்தில் அரவிந்தகுமார்

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன கூட்டணியாக இணைந்து தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பிரதி பொது செயலாளர் எஸ்.அஜித்குமார் தெரிவித்தார். உள்ளுராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கோரல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே ...

மேலும்..