செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் மின் உற்பத்தி ஆரம்பம்..

நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தில் செயலிழந்திருந்த மின் உற்பத்தி இயந்திரம் இன்று (08) முதல் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கவுள்ளது.

போதிய நிலக்கரி கையிருப்பு இன்மை மற்றும் திருத்தப் பணிகள் காரணமாக கடந்த மாதம் 23 ஆம் திகதி நுரைச்சோலை மின்நிலையத்தில் உள்ள மின் உற்பத்தி இயந்திரம் ஒன்றை செயலிழக்கச் செய்வதற்கு இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

தற்போது போதிய நிலக்கரி கையிருப்பு இருப்பதால் மின் உற்பத்தி இயந்திரங்களை இயக்க முடிந்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

தற்போது 60 ஆயிரம் மெட்ரிக் தொன் நிலக்கரி தொகையுடன் கூடிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ள நிலையில் அதில் ஒரு கப்பலில் இருந்து நிலக்கரி இறக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.