கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்ட உப மின் தயாரிப்பு நிலையத்தில் பணிபுரிந்து வந்த குடும்பஸ்த்தர் ஒருவர் காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயாவின் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள கிணறு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ...

மேலும்..

’20’ஐ ஆதரிக்கும் கட்டாயத்தில் இருக்கின்றது சுதந்திரக் கட்சி!- இப்படிக் கூறுகின்றார் மைத்திரி

"அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிக்கும் கட்டாயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இருக்கின்றது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன." - இவ்வாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ...

மேலும்..

அதியுச்ச சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலும் ’20’ வரைவை ஓரணியில் திரண்டு எதிர்ப்போம் – பிரதான எதிர்க்கட்சிகள் சூளுரை

"நாட்டில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி தலைமையிலான அதியுச்ச சர்வாதிகார ஆட்சிக்கும், குடும்ப ஆட்சிக்கும் அடித்தளம் இட்ட அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை அப்படியே ஒத்ததாகவும், நல்லாட்சிக்கு வழிவகுத்த 19ஆவது திருத்தச் சட்டத்தின் பெரும்பாலான உள்ளடக்கங்கள் அடியோடு நீக்கப்பட்டும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் ...

மேலும்..

நாடாளுமன்றுக்குச் செல்வதற்கு அனுமதி கோரி பிரேமலால் மனு – திங்கட்கிழமை முடிவு (photo)

நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். இதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் ...

மேலும்..

எரியும் கப்பலில் இருந்த பணியாளர் ஒருவர் பலி – 22 பேர் மீட்பு; எண்ணெய் கடலில் கலப்பதைத் தடுக்கக் கடும் முயற்சி (photos)

அம்பாறை, சங்கமன்கண்டி கடற்பகுதியில் தீ விபத்துக்குள்ளான எண்ணெய்க் கப்பலில் இருந்து, காணாமல்போயிருந்தவர் உயிரிழந்துள்ளார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சங்கமன்கண்டியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் MT New Diamond என்ற கப்பலில் நேற்றுக் காலை தீ பரவியிருந்தது. பனாமாவுக்குச் சொந்தமான குறித்த கப்பல் குவைத்திலிருந்து ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழு ஹக்கீமிடம் விசாரணை!!!

இலங்கையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று நடைபெற்ற குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அழைக்கப்பட்டுள்ளார். வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக கொழும்பிலுள்ள ஜனாதிபதி ...

மேலும்..

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஆணைக்குழுவில் ரணில்!!!!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க அரசியல் பழிவாங்கல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பொருளாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக்க, ஆணைக்குழுவில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே ரணில் விக்கிரமசிங்க அங்கு அழைக்கப்பட்டுள்ளார். இதன்படி ...

மேலும்..

இஸ்ரேல், நேபாளத்தில் சிக்கியிருந்த 229 பேர் இலங்கை திரும்பினர்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் நேபாளம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருந்த 203 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான ...

மேலும்..

பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதை விடவும், தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டதே எனது அரசியல் பயணம் – ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!!!

" பிரச்சினைகளைப் பேசி காலத்தை ஓட்டுவதைவிடவும், தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக்கொண்டதே எனது அரசியல் பயணம். அவ்வாறு தற்போது செயற்பட்டும் வருகின்றேன்." - என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் ...

மேலும்..

நாம் அரசியலுக்காக திறந்து வைக்கவில்லை. மாணவர்களின் கல்வி வளர்ச்சியே எமது இலக்கு – ராமேஷ்வரன் தெரிவிப்பு!!!

கல்வி வளர்ச்சி மூலமே மலையகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என கருதி அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அன்று முதல் இன்று வரை முக்கியத்துவம் வழங்கிவருகின்றது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ...

மேலும்..

அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியின் வகுப்பறை கட்டட பிரச்சினைக்கு தீர்வு.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் புனிதஜோன் பொஸ்கோ கல்லூரியில் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை எனும் திட்டத்தின் கீழ் சுமார் ஒரு கோடியே 14 லட்சம் ரூபா செலவில் நிர்மானிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடம் இன்று (04) திகதி இலங்கை தொழிலாளர் ...

மேலும்..

தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர் சைக்கிளோட்டம்!!!

தற்கொலைகளை தடுக்கும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட தொடர் சைக்கிளோட்டம், திருகோணமலையை வியாழக்கிழமை (03-092020) பிற்பகல் வந்தடைந்தது. இத் தொடர் சைக்கிளோட்ட வீரர்களை திருகோணமலை றோட்டரிக் கழக தலைவர் மற்றும் அங்கத்தவர்களால் வரவேற்கப்பட்டார்கள். . தைரியம், இரக்கம், பொறுப்பேற்றல் என்ற எண்ணக் கருவுடன் இலங்கையில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வாழும் nஐத்தா தேவபுர என்பரை தலைவராக ...

மேலும்..

ராபக்சக்களின் காட்டாட்சிக்கு ஒருபோதுமே அனுமதியோம் – முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி எதிர்ப்போம் என்கிறார் சுமந்திரன் எம்.பி.

"அரசமைப்பின் 18ஆவது திருத்தச் சட்டத்தை அடியொற்றியதாகவே 20ஆவது திருத்தச் சட்டமூலம் அமைந்துள்ளது. மீண்டும் காட்டாட்சிக்கு இது வழிவகுத்துள்ளது. இதற்கு நாம் ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம். முற்போக்குச் சக்திகளை அணிதிரட்டி நாடாளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் இந்தச் சட்டமூலத்தை முழுமையாக எதிர்ப்போம்." - இவ்வாறு தமிழ்த் ...

மேலும்..

மீண்டும் டெங்கு நோய் தலைதூக்கும் அபாயம்!!!!!

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான காலநிலையைத் தொடர்ந்து, டெங்கு நோய் மீண்டும் தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை டெங்கு காரணமாக 25 மரணங்கள் சம்பவித்துள்ளன என்று தேசிய டெங்கு ஒழிப்புப் ...

மேலும்..

வடக்கு மாகாண செயலாளர்கள் பலருக்குத் திடீரென இடமாற்றம் – ஆளுநர் சார்ள்ஸ் அதிரடி!!

வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் பலருக்கு அதிரடி மாற்றங்கள் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ்ஸினால் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்பட்ட இடமாற்றங்களில் தற்போதைய ஆளுநர் செயலக செயலாளர் எஸ்.சத்தியசீலன் கொழும்பு அமைச்சுக்கு விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது இடத்துக்குத் தற்போதைய உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரான ...

மேலும்..