ஆஸ்திரேலியா: தற்காலிக விசாக்களிலும் கடல்கடந்த தடுப்புகளிலும் உள்ள அகதிகளுக்கு நிரந்தர விசாக்களை கோரி தமிழ் அமைப்புகளும் அகதிகள் உரிமைகளுக்கான அமைப்பும் போராட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறது.
இதில் பங்கேற்ற ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரசின் இயக்குநரும் முன்னாள் தமிழ் அகதியுமான நிமலாகரன் சின்னக்கிளி, தற்காலிகமாக உள்ள அகதிகளுக்கு நிரந்தர தீர்வைக் கோரியிருக்கிறார்.
அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் அகதிகள், ஆஸ்திரேலியாவின் படகு கொள்கை காரணமாக மலேசியா, இந்தோனேசியாவில் சிக்கியுள்ள அகதிகள் தொடர்பாகவும் இப்போராட்டத்தில் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற தனது கடந்த காலத்தை பகிர்ந்த நிமலா, “கடந்த அக்டோபர் 2009யில் மலேசியாவிலிருந்து 253 தமிழர்களுடன் சிறிய படகில் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டோம். ...
மேலும்..