நாடாளுமன்ற ‘ஒன்லைன்’ விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த

நாடாளுமன்ற 'ஒன்லைன்' விண்ணப்பத்தை அலரிமாளிகையில் பூர்த்திசெய்தார் மஹிந்த - ஏனையோருக்கு 15ஆம் திகதிக்கு முன் தகவலைப் பூர்த்திசெய்ய அறிவுறுத்தல் (photo) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று அலரிமாளிகையில் உத்தியோகபூர்வமாகப் பணிகளைப் பொறுப்பேற்று சிறிது நேரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள ஒன்லைன் விண்ணப்பப் படிவத்தில் தனது ...

மேலும்..

பேராசிரியர் தம்மிக காலமானார்

பேராசிரியர் தம்மிக கங்காநாத் தனது 62ஆவது வயதில் இன்று காலமானார். இவர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிங்களம் மற்றும் வெகுஜன ஊடகக் கற்கைப பிரிவின் முன்னாள் தலைவராகவும் ஜப்பானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ...

மேலும்..

கைதைத் தடை செய்யுமாறு கோரி குருநாகல் மேயர் மனு 

தன்னைக் கைதுசெய்யுமாறு குருநாகல் நீதிவான் நீதிமன்றத்தால் பிறப்பிடிக்கப்பட்ட பிடியாணையை இடைநிறுத்துமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார். தொல்பொருள் மதிப்புமிக்க குருநாகல் புவனேக ஹோட்டல் தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில், குருநாகல் மாநகர சபை மேயர் துஷார சஞ்சீவ உள்ளிட்ட 05 சந்தேகநபர்களுக்கு எதிராக குருநாகல் நீதிவான் நீதிமன்றம் ...

மேலும்..

பேஸ்புக் ஒன்றுகூடல்; 20 பேர் சிக்கினார்கள் – போதைப்பொருட்களுடன்

மில்லனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெல்லன்துடாவ பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட விருந்துபசார நடவடிக்கையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் 20 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்திலுள்ள ஹோட்டல் ஒன்றில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு, சட்டவிரோதமாக போதைப்பொருள் பயன்படுத்தி இடம்பெற்றுக்கொண்டிருந்த விருந்துபசாரம் தொடர்பில், களுத்துறை ஊழல் ஒழிப்பு சுற்றிவளைப்பு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரினால் ...

மேலும்..

பொதுத் தேர்தலில் மோசடி! – ராமநாயக்க பரபரப்புக் குற்றச்சாட்டு

நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் மோசடிகள் நடந்திருக்கலாம் என்ற பரபரப்புத் தகவலை ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் மீண்டும் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள பிரபல சிங்கள நடிகர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே இலங்கையில் ஆட்சிக்கு வரவேண்டிய தலைவர்களைத் தெரிவுசெய்து ...

மேலும்..

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 222 இலங்கையர்கள் வருகை!

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்குஅழைத்து வரும் திட்டத்தின் கீழ், மேலும் 222 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டார், ஜேர்மனி, மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து குறித்த இலங்கையர்கள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர். இன்று அதிகாலை 1.23 மணிக்கு, மத்தள விமான ...

மேலும்..

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது!

சர்வதேச கண்காணிப்பாளர்களின் அவசியத்தை உணர்த்தியுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இது! - வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு உள்நாட்டு நீதிப் பொறிமுறைகளில் நம்பிக்கை இழந்தமையினாலேயே தமிழ் மக்கள் தம் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை ஒன்றைக் கேட்டு நிற்கின்றார்கள். சிறீலங்கா அரச படைகளால் ...

மேலும்..

பிரிந்து நிற்பதால் தமிழரின் இலக்கை அடைய முடியாது! – சம்பந்தன் சுட்டிக்காட்டு

"நாம் பிரிந்து செயற்படுவதால் அல்லது பிரிந்து செல்வதால் தமிழர்களின் இலக்கை ஒருபோதும் அடைய முடியாது." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:- "எமது அரசியல் பயணத்தில் ...

மேலும்..

பிரதமரின் செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்

பிரதமரின் புதிய செயலாளர் காமினி செனரத் அவர்கள் இன்று (2020.08.11) முற்பகல் அலரி மாளிகையில் கடமைகளை பொறுப்பேற்றார். மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக சேவையாற்றிய காலப்பகுதியில் காமினி சேதர செனரத், அவரது கூடுதல் செயலாளராகவும், தலைமை அதிகாரியாகவும் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ...

மேலும்..

வவுனியாவில் முன்னாள் போராளி மீது தாக்குதல்!! வைத்தியசாலையில் அனுமதி!!

வவுனியாவில் முள்ளாள் போராளி மீது இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த நபர் வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போராளியும், சமூக சேவகருமான வி.விநோதரன் (ஈழம்) என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் ...

மேலும்..

ஓய்வூதியத்தை இழந்த முன்னாள் எம்.பிக்கள்!

இலங்கையின் 08ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 27 பேர் ஓய்வூதியம் கிடைக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு முதல் தடவையாக நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்த வாய்ப்பை இழந்துள்ளனர். நாடாளுமன்றத்தில் 5 வருடங்களைப் பூர்த்தி செய்யும் உறுப்பினர்கள் நாடாளுமன்ற ஓய்வூதியத் திட்டத்தின் ...

மேலும்..

இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை

வயல்வெளிக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எகொடவத்த, போகொடகம, தொரகடவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. நிட்டம்புவ, யட்டியன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இக்கொலைக்கான காரணம் மற்றும் இக்கொலையை ப் ...

மேலும்..

சபரகமு பல்கலைக்கழக விளையாட்டுத் துறைசார்ந்த பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சை இலவச வழிகாட்டல் கருத்தரங்கு…

சபரகமு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களின் ஏற்பாட்டில் சபரகமுவ பல்கலைக் கழகத்தில் 18.08.2020 அன்று  நடைபெற இருக்கும் விளையாட்டுத் துறைசார்ந்த(B.sc. hons degree sports science management and physical education) பட்டப்படிப்பியல் நுழைவு பரீட்சையில் தோற்ற இருக்கும் மாணவர்களுக்கு ...

மேலும்..

மலையக மக்கள் முன்னணி முழுமையாக மறுசீரமைக்கப்படும்

(க.கிஷாந்தன்) தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் வழங்கப்படாவிட்டால் நிச்சயம் மாற்று நடவடிக்கையில் இறங்குவோம். இதுதான் எனது கடைசி தேர்தல். இனிமேல் போட்டியிடமாட்டேன். மலையக மக்கள் முன்னணியும் முழுமையாக மறுசீரமைக்கப்படும் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். அட்டனில் உள்ள ...

மேலும்..

ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது

பொரள்ள பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ருகுணுகலா மாவத்த பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணிடம் இருந்து 8 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 52 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை ரத்மலான பகுதியில் வைத்து 2 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 55 வயதுடைய பெண் ...

மேலும்..