எதிர்க்கட்சியினரை விட புலிகள் மேலானவர்கள்! – வாசுதேவ தெரிவிப்பு

"சுனாமி உள்ளிட்ட இடர் வேளைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அரசுக்கு எதிராகத் தாக்குதல் நடத்தவில்லை. இதனால்தான் அன்றைய காலத்தில் அரசால் மீட்பு நடவடிக்கைகளையும் ஏனைய இடர்கால நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடிந்தது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சியினர் அப்படியல்லர்." - இவ்வாறு தெரிவித்தார் வாசுதேவ நாணயக்கார. அவர் மேலும் ...

மேலும்..

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்!

சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் சில தினங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் ஊசி மருந்துகளை வழங்கும் நடவடிக்கை 3 வாரங்கள் தாமதமடைந்திருந்ததாகவும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி ...

மேலும்..

12 கடற்படையினர் கொரோனாவிலிருந்து மீண்டனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை உறுப்பினர்கள் 12 பேர் இதுவரை மழுமையாக குணமடைந்துள்ளனர். கடற்படை பேச்சாளர் லெப்டினன் கொமான்டர் இசுறு சூரிய பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். அத்துடன், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கையில் இருந்து கடற்படையினர் விலகியுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை ...

மேலும்..

கிளிநொச்சியில் பலத்த காற்றுடன் மழை: பப்பாசி செய்கை கடுமையாகப் பாதிப்பு!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக பப்பாசிச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.  இதனால் 10 இலட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நட்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயி கவலை தெரிவித்துள்ளார். முழங்காவில் பகுதியில் நேற்று (புதன்கிழமை) மாலை பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக ...

மேலும்..

முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என எச்சரிக்கை!

கொரோனா முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் மிகுந்த அவதானமாக மக்கள் செயற்பட வேண்டும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் முடக்க நிலை தளர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தநிலையிலேயே அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

தமிழ் புறக்கணிப்பு: கிளிநொச்சியில் ஆசிரியர்களுக்கான அடையாள அட்டை வழங்கல் நிறுத்தம்!

கிளிநொச்சி கல்வி வலயத்தினால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுவந்த அடையாள அட்டைகள் இன்றுமுதல் நிறுத்தப்பட்டுள்ளன. குறித்த அடையாள அட்டைகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே விபரங்கள் உள்ளநிலையில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை தொடர்பாக ஊடகங்களில் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் கிளிநொச்சி ...

மேலும்..

தனிமைப்படுத்தல் சட்டத்தினை மீறிய இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!

தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு எதிராக செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் இந்தியாவின் புதுடெல்லியில் பள்ளிவாசல் ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே குறித்த இரண்டு இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து 11 இந்தியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ...

மேலும்..

கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்கள் தொடர்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் – எஸ். சதாசிவம்

(க.கிஷாந்தன்) கொழும்பில் இருந்து வந்து வேலை இல்லாமல் தவிப்பவர்களுக்கு தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பில் பிரதமரிடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன் - என்று இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் தெரிவித்தார். அட்டனில் நேற்று (06.05.2020) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் ...

மேலும்..

மலையகத்தில் வாழும் பௌத்தர்களும் வீடுகளில் இருந்தபடியே ஆன்மீக வழிபாடுகளில்..

(க.கிஷாந்தன்) வருடாந்தம்  மே மாதம்  பெளர்ணமி நாளன்று உலகில் பல நாடுகளிலும் வாழும் அனைத்து பெளத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு பெளத்த மதப் பண்டிகையே வெசாக் பண்டிகையாகும். அந்தவகையில் வெசாக் நோன்மதி தினம் இம்முறை இலங்கையில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கொண்டாடப்பட்டது. மலையகத்தில் ...

மேலும்..

இராணுவ வீரர்கள் பயணித்த கெப் ரக வாகனம் விபத்து – 7 பேர் காயம்!

பொலன்னறுவை – ஹபரன பிரதான வீதியின் கிரிதலே பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இராணுவ வீரர்கள் பயணம் செய்த கெப் ரக வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்தமை காரணமாகவே இன்று(வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக பொலன்னறுவை வைத்தியசாலையில் ...

மேலும்..

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் 306 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “வெசாக் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு ...

மேலும்..

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒரேநாளில் 1450பேர் பாதிப்பு- 189பேர் உயிரிழப்பு

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு, கடந்த 24 மணித்தியாலங்களில் 1450பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 189பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 63,496ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,232ஆக உயர்ந்துள்ளது. மேலும், 31,093பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 28,171பேர் பூரண ...

மேலும்..

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவராக மேலும் ஒரு வருடத்திற்கு சங்கா நீடிப்பார்?

மெர்லிபோன் கிரிக்கெட் கழகத்தின் தலைவரான குமார் சங்கக்காரவின் பதவிக்காலத்தை, இன்னும் ஒரு வருடம் நீடிக்க கழக நிர்வாகம் தீர்மானத்துள்ளது. கிரிக்கெட்டின் சட்டவிதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் மெர்லிபோன் கிரிக்கெட் கழகம், எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி நடைபெறவுள்ள ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது ...

மேலும்..

வரலாற்றில் முதல் தடவையாக எளிமையாக கொண்டாடப்பட்ட அரசு குடும்ப விழா

பிரித்தானியாவின் முடிக்குரிய இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் மார்க்கல் தம்பதிகளின் புதல்வன், ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் முதலாவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. ஆர்ச்சி மவுண்ட்பேட்டன் விண்ட்ஸரின் (Archie Mountbatten-Windsor) குறித்த பிறந்த நாள் நேற்று புதன்கிழமை கொண்டாடப்பட்டுள்ளது. பிரித்தானிய முடிக்குரிய அரச குடும்பத்தின் எட்டாவது பூட்டப்பிள்ளையாக ...

மேலும்..