பிரதான செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான சமாதானம்,நல்லிணக்கம் தொடர்பான விழிப்பூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு சமாதானமும்,சமூகப்பணியும் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கல்முனை எஸ்.எல்.ஆர் தனியார் விடுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (29)காலை முதல் மாலை வரையும் இடம்பெற்றது. இக்கலந்துரையாடல் நிகழ்வில்  தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தமிழ்துறை மற்றும்,ஊடகத்துறைக்கான பொறுப்பான முதனிலை ...

மேலும்..

சீனாவில் இருந்து 10,000 தண்டவாளங்கள் இறக்குமதியாகிறது!

ரயில் தடம்புரள்வுகளை குறைக்கவும், தொடரூந்து சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 ரயில் தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதிசெய்ய எதிர்பார்த்துள்ளதாக ரயில் திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாக தொடருந்து தடம்புரண்ட சம்பவங்களை கருத்திற்கொண்டு இந்த ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு கொலைமிரட்டல் – விசாரணை நடத்த நீதிமன்ற உத்தரவு

தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கொலைமிரட்டலுடன் தொடர்புடைய தொலைபேசி இலக்கம் குறித்து விசாரணை நடத்த பொலிஸார் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளன தொலைபேசி அழைப்புகள் மூலம் அச்சுறுத்தலுக்குள்ளான ஆணைக்குழு உறுப்பினர்கள் எஸ்.பி. திவாரட்ன மற்றும் கே.பி.பி. பத்திரன ஆகியோர் முன்வைத்த முறைப்பாடுகளுக்கு அமைய ...

மேலும்..

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கான அடிப்படை ஏற்பாடுகள் தயார் நிலையில்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான அடிப்படைப் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க அச்சுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அச்சிடுதல் தொடர்பான ஆய்வுகள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகளை முடிக்க எதிர்பார்த்துள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே ...

மேலும்..

யாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மற்றும் வன்முறையாளர்கள் தொடர்பில் தகவல் வழங்கினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகிந்த குணரட்ண அறிவித்துள்ளார். மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத் துன்புறுத்திய ...

மேலும்..

விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கை விஜயம்

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் விக்டோரியா நியூலண்ட் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை, மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு அமெரிக்க ஆதரவை வழங்குவதில் அவர் கவனம் செலுத்துவார் என்று ...

மேலும்..

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீர் ...

மேலும்..

பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) யாழ்.சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 5 மணிக்கு யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கூட்டத்தில் தமிழ் ஈழ ...

மேலும்..

13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி

"அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ...

மேலும்..

சாள்ஸ் மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்- மக்கள் விடுதலை முன்னணி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் ஊடகவியலாளர் சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பிஎஸ்எம் சாள்ஸ் பதவி விலகியமை   நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் . எதிர்வரும் மார்ச் மாதம் ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி சார்ள்ஸ் பதவி துறப்பு!

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ் தனது பதவியைத் துறந்துள்ளார். இதேநேரம் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவாவும் பதவி விலகுவார் என்று எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருமதி சார்ள்ஸின் பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

14 வயது சிறுமி இரண்டு ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார் !

முல்லைத்தீவு பகுதியில் 14 வயது சிறுமியொருவர் தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுமி புதுக்குடியிருப்பு பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து இளைஞர்களால் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சட்டவைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுமி தற்போது ...

மேலும்..

சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பட்ரிசியா ஸ்கொட்லண்ட்!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் கலந்துகொள்வதற்காக பொதுநலவாய செயலாளர் நாயகம் பட்ரிசியா ஸ்கொட்லண்ட் சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பொதுநலவாய செயலகம் தெரிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த வாரமளவில் சிறிலங்காவிற்கு விஜயம் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி ...

மேலும்..

துப்பாக்கிகளுடன் வந்த ரஷ்ய தம்பதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறையினர் நேற்று (25) மதியம் பொம்மை கைத்துப்பாக்கிகள் என இரண்டு சாதனங்களை வைத்திருந்ததாக தெரிவித்து மூவரை தடுத்து நிறுத்தியுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ரஷ்ய தம்பதியொருவர் கொண்டு வந்த சூட்கேஸில் இருந்து ...

மேலும்..