இலங்கை செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு!

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 915ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 893 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் புதிதாக மேலும் 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 524 பேர் இதுவரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 382 பேர் கொரோனா தொற்றில் ...

மேலும்..

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 915 மில்லியனாக அதிகரிப்பு

இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் ரங்கிரி தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கம் ஐந்து மில்லியன் ரூபாவையும் நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன மற்றும் ஜனக ...

மேலும்..

முஸ்லிம்களுக்கு எதிராக இனவாதச் செயற்பாடுகள் – அருவருக்கத்தக்கவை என்கிறார் சஜித்

எமது முஸ்லிம் சகோதரர்களுக்கு எதிராகப் பரவலாக அரங்கேற்றப்படுகின்ற இனவாதச் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கவை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "எமது சமூகத்தில் தொடக்க நிலையிலுள்ள இனவாதமானது எமது தாய் நாட்டின் மக்களுக்கு மத்தியில் இன, மத, ...

மேலும்..

ராஜபக்சக்களின் விஷமத்தனமான ஆயுதமே இனவாதம்   – அநுரகுமார குற்றச்சாட்டு

"நாட்டு மக்களுக்கு நல்லவர்கள் போல் பாசாங்கு காட்டிக்கொண்டு மறுபுறத்தில் ஆட்சியைத் தக்கவைப்பதற்காக தமிழ் - முஸ்லிம் - சிங்கள விரோத இனவாதத்தைக் கிளறிவிடுவது ராஜபக்ச கூட்டணியின் விஷமத்தனமான ஆயுதமாக உள்ளது." - இவ்வாறு ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க குற்றம்சாட்டினார். அவர் மேலும் தெரிவிக்கையில், "நாடாளுமன்றத் ...

மேலும்..

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சுமந்திரன்!

கடந்த 8ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் Truth With Chamuditha என்பவருக்கு வழங்கிய நேர்காணல் மிகப்பெரும் சர்ச்சையை தமிழ் தேசிய அரசியல் பரப்பில் உருவாக்கியுள்ளது. https://youtu.be/msg50-5DsYY இந்நிலையில் பல்வேறு தமிழ் அரசியல் கட்சியினரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில் முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

இனவாதத்தைத் தூண்டாதீர்கள்; இன ஒற்றுமையுடன் வாழ்வோம் – பிரதமர் மஹிந்த வேண்டுகோள்

"இனவாதங்களைத் தூண்டும் வகையில் எவரும் செயற்படக்கூடாது. இன ஒற்றுமையுடன் அனைவரும் வாழ ஓரணியில் திகழ வேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச. இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். இனவாதத்தை வளர்த்து விட்டு, அதில் ...

மேலும்..

மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஊடகவியலாளர் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கல்முனை பிரதான வீதி, பெரிய கல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் உழவு இயந்திரம் மோதி விபத்துக்குள்ளானது. இதன்போது, மோட்டர் சைக்கிளில் பிரயாணித்த ஊடகவியலாளர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிக்குடி ...

மேலும்..

இலங்கையில் நடைபெறவிருந்த உலகக்கிண்ண தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

இலங்கையில் நடைபெற இருந்த மகளிர் உலகக்கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தகுதிச்சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஐ.சி.சி.யின் பத்தொன்பது வயதுக்குட்பட்ட உலகக்கிண்ண ஐரோப்பா பிரிவு- 2 தகுதி சுற்றுப் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஐ.சி.சி.யின் விரிவான தற்செயல் திட்டமிடல் செயல்பாட்டின் ஒரு பகுதியாக, உறுப்பினர்கள், சம்பந்தப்பட்ட அரசு ...

மேலும்..

மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் பாதிப்பு

(க.கிஷாந்தன்) மரக்கறி வகைகளின் விலைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளதால் நுவரெலியா மாவட்ட விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர்நோக்கியுள்ளனர். உற்பத்திக்காக செலவிட்ட பணத்தைக்கூட ஈடுசெய்ய முடியாதிருப்பதாக கவலை வெளியிடும் விவசாயிகள், இது விடயத்தில் அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர். இலங்கையில் அதிகளவு மரக்கறி ...

மேலும்..

கடல் கொந்தளிப்பால் அம்பாறை மாவட்ட பிரதேச பகுதிகளில் கரைவலை மீன்பிடி தொழில் பாதிப்பு!

பாறுக் ஷிஹான் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச பகுதிகளில்   கரைவலை மீன்பிடித் தொழிலானது முற்றுமுழுதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கரையோர மீனவர்கள் தெரிவிக்கின்றனர் பெரியநீலாவணை-மருதமுனை-கல்முனை உள்ளிட்ட பிரதேசங்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.கடந்த சில தினங்களாக ஏற்பட்ட கடல்மட்ட வேறுபாடும் கடல்கொந்தளிப்பின் அதிகரித்த நிலையுமே இதற்கான காரணங்களாக உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடல்நீரானது ...

மேலும்..

மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர்.

(க.கிஷாந்தன்) மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு இன்று அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், மலையகத்திலுள்ள நகர்ப்பகுதிகளில் மதுபான நிலையங்களுக்கு முன்னால் பெருமளவானவர்கள் அணிதிரண்டனர். சமூக இடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் மதுபானம் வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு செயற்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக அட்டன் நகரிலுள்ள ...

மேலும்..

கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு ஆரம்பம்

பாறுக் ஷிஹான்   கொரோனா வைரஸ் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவுகள் இம்மாதம் 18 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வழங்கப்படவுள்ளதாக      அம்பாறை மாவட்ட    சமூர்த்தி  பணிப்பாளர் எம்.எஸ்.எம் சப்றாஸ் தெரிவித்தார். அம்பாறை ...

மேலும்..

இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை

இந்தியாவின் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த தங்களை நாட்டுக்கு அழைக்க நடவடிக்கை எடுங்கள் என மத்திய அரசிடம் இந்தியத் தமிழர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிளிநொச்சியில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர்கள் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். கடந்த பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு 8 ...

மேலும்..

பயணிகள் விமான சேவை இடைநிறுத்தம் இம்மாத இறுதிவரை நீடிப்பு

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது நாளாந்த பயணிகள் விமான சேவைகளின் தற்காலிகமாக இடைநிறுத்தத்தை எதிர்வரும் மே 30 ஆம் திகதிவரை நீடிப்பதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தாம் விமான சேவைகளை மேற்கொள்ளும் உலகளாவிய வலையமைப்பிலுள்ள நாடுகள் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகள், ...

மேலும்..

தமிழரசுக் கட்சியில் சுமந்திரன் நீடித்தால் அது சம்பந்தன், மாவையின் பலவீனமே- சிவசக்தி ஆனந்தன்

தமிழின உரிமைப் போராட்டத்தின் ஓரங்கமான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை மோசமாக விமர்சித்த சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீடித்தால் அது அக்கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தன், தலைவர் மாவை.சேனாதிராஜா ஆகியோரின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ...

மேலும்..