இலங்கை செய்திகள்

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதலாம் நாள் நிகழ்வுகள் இன்று (புதன்கிழமை) காலை யாழ்.செம்மணி பகுதியில் இடம்பெற்றது. பொலிஸார், இராணுவத்தினர் நிகழ்வை தடுத்தபோதும் எதிர்ப்பை மீறி இந்த நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது. 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த போரில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி பொதுமக்களுக்கான ...

மேலும்..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3525 பேர் கொரோனாவால் பாதிப்பு – மொத்த பாதிப்பு 74 ஆயிரத்தைக் கடந்தது

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 2415 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு ...

மேலும்..

வெள்ளை வான் ஊடக சந்திப்பு – ராஜித மீண்டும் விளக்கமறியலில்

வெள்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக ராஜித சேனாரத்னவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிணை உத்தரவு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளை வான் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்த ...

மேலும்..

வவுனியா மாவட்ட விவசாயிகளுக்கு ஓர் நற்செய்தி: மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன்

வவுனியாநிருபர்் 2020ம் ஆண்டிற்கான சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டத்திற்கு வவுனியா மாவட்ட விவசாயிகளை எதிர்வரும் 20.05.2020ம் திகதிக்கு முன்னாராக விண்ணப்பிக்குமாறு வவுனியா மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அருந்ததி வேல்சிவானந்தன் அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளார். சிறுபோகச்செய்கை விதை மானியம் வழங்கல் திட்டம் ...

மேலும்..

ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சிக்கு தேர்தலில் முடிவு கட்டுவர் மக்கள் – சஜித் திட்டவட்டம்

"கொரோனாவின் அபாயத்துக்குள் நாட்டு சிக்கித் தவிர்த்துக்கொண்டிருக்கும்போது மறுபுறத்தில் ராஜபக்சக்களின் சர்வாதிகார இராணுவ ஆட்சி தொடர்கின்றது. இந்தக் கொடூர ஆட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி முடிவு கட்டுவர்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் ...

மேலும்..

இராணுவ ஆட்சி இல்லை என்று மறுக்கிறது அரசு!

"இராணுவத் தளபதிகளை ஜனாதிபதியாக்குவதற்கு முயற்சித்து இரண்டு தடவைகளும் தோல்வி கண்டவர்களே இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஆட்சியை நோக்கிப் பயணிக்கின்றார் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்." - இவ்வாறு அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். முன்னாள், இந்நாள் இராணுவ அதிகாரிகளுக்கு அரச கட்டமைப்பில் முக்கிய ...

மேலும்..

கொழும்பில் இன்று விசேட சோதனை

கொழும்பில் இன்று (புதன்கிழமை) விசேட சோதனை நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்படவுள்ளது. பொதுமக்கள் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்படுகிறார்களா என்பதை அவதானிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் ஆலோசனைக்கு அமைவாக குறித்த சோதனை நடவடிக்கைகள் ...

மேலும்..

வவுனியா – பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மேலும் 129 பேர் விடுவிப்பு

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இன்று (புதன்கிழமை) 129 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பி.சி.ஆர். பரிதோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்ட 129 பேர் இன்றைய தினம் தமது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டமைக்கான சான்றிதழ்களும் ...

மேலும்..

அரசியல் கைதிகள் தீர்வு விவகாரங்கள்: சுமந்திரன் – மஹிந்த ஒருமணிநேரம் பேச்சு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்த பேச்சுக்களின் போது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு குறித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயராம மாவத்தையிலுள்ள பிரதமரின் ...

மேலும்..

350 இற்கும் மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர், முன்னாள் போராளிகளுக்கு (2ம் கட்டம்) தமிழ் சி.என்.என். நிவாரணப் பணி காரைதீவு அம்பாறையில்!

தமிழ் சி.என்.என். குழுமம் யாழ். மற்றும் வன்னி மாவட்டங்களில் பல்வேறு பட்ட உதவித்திட்டங்களை அதன் நிர்வாக இயக்குநர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமியால் பல்வேறு சேவை நோக்குள்ள நல்லுள்ளம் படைத்தவர்கள் ஊடாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இரண்டாம் கட்ட உலர் உணவு வழங்கும் செயற்றிட்டத்துக்கு ...

மேலும்..

நிவாரணப் பணிகளுக்கு பதிலாக பிரசார நடவடிக்கைளே அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் – அனுர குற்றச்சாட்டு

தேர்தல் பிரசார நடவடிக்கைள் தற்போது ஆரம்பிக்கப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு பதிலாக முற்றுமுழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகள் மட்டுமே முன்னெடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின்  தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ...

மேலும்..

தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது – திஸ்ஸ விதாரண

கொரோனா வைரஸ் இன்னும் இரண்டு ஆண்டுகள் கூட நீடிக்கலாம். அதுவரை தேர்தலை நடத்தாது பாத்திருக்க முடியாது என லங்கா சம்சமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். தேர்தல்கள் செயலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் மாவையின் கோரிக்கைக்கு மஹிந்த உறுதி!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் உறுதி வழங்கியுள்ளார். நேற்று காலை பிரதமரின் செயலாளருடன் தொடர்பு கொண்டு மாவை சேனாதிராஜா வழங்கிய தகவலின் அடிப்படையில் கூட்டமைப்பின் பேச்சாரள் எம்.ஏ.சுமந்திரனுடன் இடம்பெற்ற ...

மேலும்..

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருந்தோட்டத் துறையின் பங்களிப்பு அவசியம் – ஜனாதிபதி

இலக்குடன் செயற்பட்டால் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு விரிவானதொரு பங்களிப்பை வழங்கும் இயலுமை பெருந்தோட்டத் துறையிடம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் பேசிய அவர், கிராமிய மரமுந்திரிகை பயிர்ச்செய்கையை முன்னேற்றி கிராமிய பொருளாதாரத்தை ...

மேலும்..

ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் ஆசன எண்ணிக்கைக்கு அமைய போக்குவரத்து ஆரம்பம்

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் அரச, தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் குறித்த சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு ...

மேலும்..