இலங்கை செய்திகள்

தேர்தல் மனுக்களை விசாரிக்க முழுமையான ஆயம் நியமிப்பு!

ஜூன் 20ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிப்பதற்கு ஐவர் கொண்ட நீதியரசர்கள் குழாம் நியமிக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு ஆட்சேபனை தெரிவித்து 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதைத் தொடர்ந்து ...

மேலும்..

ராஜிதவின் முதலைக்கதையே வடக்கு வாக்கு வங்கியை எங்களுக்குச் சிதைத்தது! – இப்படி ராஜபக்ச அணி புலம்பல்…

"ஜனாதிபதித் தேர்தலின்போது கோட்டாய ராஜபக்சவுக்கு வாக்களிப்பதற்கு தயாராகவிருந்த வடக்கு, கிழக்கு மக்கள், ராஜித சேனாரத்னவின் முதலைக் கதையால் ஏற்பட்ட அச்சம் காரணமாகவே முடிவை மாற்றினர்." - இவ்வாறு அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் ...

மேலும்..

925 ஆக அதிகரித்தது கொரோனா தொற்று…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்றிரவு அறிவித்துள்ளது. அதேவேளை, தொற்றுக்குள்ளான 63 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். அதையடுத்துத் தொற்றிலிருந்து ...

மேலும்..

அரச பதவிகளில் இராணுவம்; சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு – ரணில் கொதிப்பு…

"அரச நிறுவனங்களுக்குத் தலைவர்களாக, பணிப்பாளர்களாக இராணுவம்  மற்றும் படைகளின் உயர் அதிகாரிகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமிப்பதன் மூலம் ஜனநாயக செயற்பாடுகள் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளன. சர்வாதிகாரத்தின் பக்கம் நாடு பயணிப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. எனவே, ஜனநாயக ரீதியில் நாங்கள் எமது கடுமையான எதிர்ப்பை ...

மேலும்..

தனது மூன்று மாத சம்பளத்தை அன்பளிப்புச் செய்தார் கோட்டா!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது மூன்று மாத சம்பளத் தொகையான 2 இலட்சத்து 92 ஆயிரத்து 500 ரூபாவை கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்துள்ளார். அதற்கான காசோலை ஜனாதிபதியால் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதியின் ...

மேலும்..

கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை – சுகாதார அதிகாரிகள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றானது இன்னும் சமூக பரவலுக்கு உள்ளாகவில்லை என சுகாதார அதிகாரிகளும் கொரோனா தொற்று ஒழிப்புக்கான விசேட தொற்று நோயியல் பிரிவினரும் தெரிவித்துள்ளனர். குறித்த பிரிவினருக்கும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இந்த ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 916 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இன்று மேலும் 63 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளனர். அதற்கமைய கொரோனாவால் ...

மேலும்..

மட்டு.மாநகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் பலியானோருக்கு அஞ்சலி! அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பு…

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று ...

மேலும்..

மட்டு.மாநகர சபை அமர்வில் முள்ளிவாய்க்காலில் பலியானோருக்கு அஞ்சலி! அனைத்து கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்பு.

மட்டக்களப்பு மாநகர சபையின் பொது அமர்வில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதியோடு நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட யுத்தத்தின் போது உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் 33 ஆவது சபை அமர்வானது இன்று ...

மேலும்..

கொழும்பு மற்றும் கம்பஹாவில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயெ இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது!

வவுனியாநிருபர் முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்ட 1330 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னி பிராந்திய போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (14.05) பிற்பகல் குறித்த போதைப் பொருள் மீடகப்பட்டதுடன் 36 வயதுடைய நபர் ஒருவரும் கைது ...

மேலும்..

485 பேர் குணமடைவு; 461 பேர் சிகிச்சையில்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை பாதிப்படைந்த 915 பேரில் மேலும் 63 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்துத் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 445 ஆக உயர்ந்துள்ளது. 09 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 461 நோயாளிகள் வைத்தியசாலைகளில் ...

மேலும்..

தேர்தல் வர்த்தமானிக்கு எதிரான மனுக்களை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் நியமனம்

நாடாளுமன்ற தேர்தல் வர்த்தமானி அறிவிப்பை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்பமை உரிமை மனுக்களை ஆராய்வதற்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில் உயர்நீதிமன்றினால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் புவனெக அலுவிஹார, ...

மேலும்..

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் விடுவிப்பு!

வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 111 பேர் தனிமைப்படுத்தல் காலம் முடிவடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். வவுனியா, பெரியகட்டு இராணுவ முகாமில் தனிமைபப்படுத்தப்பட்டிருந்த 111 பேரே இவ்வாறு இன்று (வியாழக்கிழமை) காலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். வவுனியா பெரியகட்டு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமுக்கு கடந்த ...

மேலும்..

ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டு – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் 466 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இதன்போது 245 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இலங்கையிலும் வேகமாகப் ...

மேலும்..