இலங்கை செய்திகள்

இன்னும் 2 வாரங்கள் அவதானம் அவசியம்! – இல்லையேல் பேராபத்து உறுதி – மக்களுக்கு சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

"நாட்டு மக்கள் அனைவரும் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். இல்லையேல் கொரோனா வைராஸால் பேராபத்து ஏற்படுவதைத் தவிர்க்க முடியாமல் போய்விடும்." - இவ்வாறு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ...

மேலும்..

ஒருபுறம் கொரோனா! மறுபுறம் டெங்கு!! – பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு

எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் வாழும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என்று டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காணப்படும் இவ்வேளையில், டெங்கு நோய் தொடர்பிலும் ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அபாயம் மிகமிகக் குறைவே! – வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி

"யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா அபாயம் மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. மக்கள் பதற்றமடையத் தேவையில்லை." - இவ்வாறு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா எதிர்ப்பில் உடல் உள ஆரோக்கியம் முக்கியமானது மக்கள் பதற்றமடையக் கூடாது. கொரோனா தொற்றுத் ...

மேலும்..

விடுதலைப்புலிகள் பற்றி கதைக்க யாருக்கும் தகுதியில்லை !யாழ்.மாநகர மேயர்

விடுதலைப்புலிகள் பற்றிய கருத்துக்களை யார் முன்வைத்தாலும் தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டர்கள் என யாழ்.மாநகர மேயர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். அண்மையில் சிங்கள ஊடகமொன்றிற்கு சுமந்திரன் வழங்கிய பேட்டியொன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பில் முனவைத்த கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு கூறியுள்ளார். அவர் இது ...

மேலும்..

மதுபானச்சாலைகளை தொடர்ந்தும் மூடி கசிப்பு காச்சுவோரையும் தண்டிக்க வேண்டும்.

மதுபானச்சாலைகளை முழுமையாக மூடிவிடுவதே மக்களுக்கு ஆரோக்கியமாக அமையும், அதேவேளை பல இடங்களில் குடிசை கைத்தொழில் போன்று கசிப்பு காச்சும் இடங்களையும் அதற்கு துணைபோகும் நபர்களையும் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி ...

மேலும்..

5000 ரூபா கொடுப்பனவு மலையக இளைஞர்களுக்கு நிரந்தர தீர்வாகாது அருணலு மக்கள் முன்னணியின் தலைவர் வைத்தியர் கே.ஆர் கிசான் தெரிவிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இன்று மலையக பகுதிகளை நோக்கி பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வருகை தந்துள்ளனர் இதில் பெரும் பாலானோர் இளைஞர் யுவதிகள் தற்போது இவர்களுக்கு அரசாங்கம் 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்கி வருகிறது.இதனை மாதம் அரசாங்கத்திற்கு வழங்கவும் முடியாது. இன்றுள்ள ...

மேலும்..

கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா? சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா?. மயூரன் காட்டம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கானதா ? அல்லது சுமந்திரன் எனும் தனிமனிதனுக்கானதா? என கூட்டமைப்பின் தலைவரும் தமிழரசுக்கட்சியின் தலைவருமே முடிவெடுக்க வேண்டுமென முன்னாள்  வடக்கு மாகாணசபை உறுப்பினர் செந்தில்நாதன் மயூரன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் :- தமிழ்த் தேசிய ...

மேலும்..

சற்று முன் வவுனியா குருமன்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கில் விபத்து : இருவர் காயம்…

வவுனியா குருமன்காட்டு சந்தி , புகையிரத நிலைய வீதியில் இன்று (15.05.2020) மாலை 3.45 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். குருமன்காட்டு பகுதியிலிருந்து புகையிரத நிலைய வீதியூடாக வவுனியா நகர் நோக்கி பயணத்த மோட்டார் சைக்கில் எதிரே வந்த ...

மேலும்..

வவுனியாவில் கடற்படையினரின் பேரூந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து…

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் இன்று (15.05.2020) மாலை 3.30 மணியளவில் கடற்படையினரின் பேருந்து உட்பட மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானது. தென்பகுதியிலிருந்து வடபகுதி நோக்கி கடற்படையினரை ஏற்றுக்கொண்டு பயணித்த கடற்படையினரின் பேருந்துடன் கனகராயன்குளம் பகுதியிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பட்டா ...

மேலும்..

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி குற்றச்சாட்டு: கிராம அலுவலர் மீது விசாரணை…

வவுனியாவில் முதியோர் கொடுப்பனவில் மோசடி இடம்பெற்றுள்ளதாக செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டையடுத்து குறித்த கிராம அலுவலர் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வவுனியா, கோவில்குளம் பகுதியில் முதியோர் கொடுப்பனவின் போது முதியவர் ஒருவருக்கு கொடுப்பனவு வழங்கப்படாது அவரது பெயரில் வந்த கொடுப்பனவை கிராம அலுவலர் பெற்றுக் கொண்டதாக ...

மேலும்..

கையில் தொடாமல் கைகழுவும் கருவி மலையகத்தில் கண்டுபிடிப்பு…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  கொவிட் 19 வைரஸ் பரவலினை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட அதில் ஒன்றாக தனிமை படுத்தல் சட்டத்தினை கொண்டு வந்து ஊரடங்கு சட்டத்தினை அமுல் படுத்தியது. இந்த ஊரடங்கு காலப்பகுதியினை பல்வேறு நபர்கள் பயனுள்ள விடயங்களை ...

மேலும்..

விபத்தில் உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் நீதிகோரி மன்னாரில் போராட்டம்!

மன்னார், மதவாச்சி பிரதான வீதி, பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்திவந்தவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ...

மேலும்..

பெண் போராளிகளின் படங்களைத் தாங்கிய நிகழ்வு- ஸ்ரீதரன், வேழமாலிகிதன் ஆகியோர் வாக்குமூலம் வழங்கினர்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் ஆகியோரிடம் கிளிநொச்சி பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர். கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்த இருவரிடமும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பொலிஸார் வாக்குமூலம் பதிவு ...

மேலும்..

வவுனியா விபத்தில் இருவர் படுகாயம்!

வவுனியா, ரயில் நிலைய வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குருமன்காடு பகுதியில் இருந்து ரயில் நிலைய வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கிள் எதிரே வந்துகொண்டிருந்த பாரவூர்தியுடன் மோதியதில் இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றது. விபத்தில் ...

மேலும்..

வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய தற்பொழுது காலவதியாகியுள்ள குறித்த உரிமை பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் ஜூலை 31ஆம் திகதிவரை ...

மேலும்..