இலங்கை செய்திகள்

ராஜித மங்களவுடன் முடிந்துவிடாது_இம்ரான் மஹரூப் முன்னால் எம்.பி…

அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் மங்கள சமரவீரவுடன் முடிந்துவிடாது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் தெரிவித்தார். சனிக்கிழமை மாலை (16)கிண்ணியாவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து ...

மேலும்..

மற்றுமொரு போதகர் ஆராதனை நடாத்தியதாக பொலிசார் வழக்கு!..

ஜே.எப்.காமிலாபேகம்-தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி, தேவ ஆராதனை நடத்திய குருநாகல், மாரவில பகுதியைச் சேர்ந்த போதகர் மீது பொலிஸார் வழக்கு தாக்கல் தொடரவுள்ளனர். குறித்த போதகரால், நேற்று(16) சனிக்கிழமை பகல் ஆராதனை நடத்தப்பட்டதாக, பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த கிறிஸ்தவ சபையில், அந்த சந்தர்ப்பத்தில் 18 ...

மேலும்..

நாளை முதல் 19 ரயில்கள் சேவையில்

நாடு முழுவதும் நாளை (திங்கட்கிழமை) முதல் 19 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் ரயிலில் பயணம் செய்ய அனுமதி கோரியுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ குறிப்பிட்டார். அதன்படி, ஏழு ரயில்கள் ...

மேலும்..

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு சஜித் வலியுறுத்து

சீனாவைக் கைவிட்டுச் செல்லும் முதலீடுகளை ஈர்க்குமாறு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த அவர், இந்தோனேசிய அரசாங்கம் அமெரிக்க முதலீட்டாளர்களையும் சீனாவிலிருந்து விலகிச் செல்லும் பிற வணிகங்களையும் ஈர்ப்பதற்கான ஒரு பொறிமுறையை அமைத்துள்ளது ...

மேலும்..

சிறை வைக்கப்பட்டுள்ள ராஜிதவுக்கு நீதி வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து…

"ராஜபக்ச அரசின் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே முன்னாள் சுகாதர அமைச்சர் ராஜித சேனாரத்ன கைதுசெய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளார். எனவே, அவருக்கு நீதி கிடைக்க வேண்டும்." - இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நல்லாட்சி ...

மேலும்..

நீண்டகாலம் தண்டனை அனுபவித்த கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் கோரிக்கை

20 ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த 60 வயதுக்கும் மேற்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என சிறைச்சாலைகள் திணைக்களம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி 60 வயதுக்கு மேற்பட்ட குறைந்தது 500 கைதிகளே சிறைச்சாலைகளில் உள்ளனர் என்று சிறைச்சாலை ஆணையாளர் ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை எமது இருப்பிடங்களில் நினைவேந்துவோம்

கொரோனா இடர்கால நிலைமை கருத்திற் கொண்டு தமது வீடுகளில் இருந்தவாறே முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை நினைவேந்துவோம் என தமிழ் மக்கள் பேரவை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த விடயம் குறித்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை, “மே 18 முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 11ஆவது ...

மேலும்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வு பூர்வமாக அஞ்சலி செய்வோம் – சர்வதேச இந்து இளைஞர் பேரவை

முள்ளிவாய்க்காலில் இழந்த உறவுகளுக்காக உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்ய வேண்டியது ஒவ்வொரு எஞ்சிய தமிழனின் கடமையுமாகும் என சர்வதேச இந்து இளைஞர் பேரவைத் தலைவர் சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் தெரிவித்துள்ளார். இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் ...

மேலும்..

நீதிமன்றத் தீர்ப்பு எதிரணியின் வாய்களை அடக்கச் செய்யும்! – இப்படி அரசு நம்பிக்கை…

"நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் பொதுத்தேர்தல் திகதி ஆகியவற்றுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையின்போது உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு எதிரணிகளின் வாய்களை அடக்கச் செய்யும் என்று நாம் நம்புகின்றோம்." - இவ்வாறு அரச பேச்சாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து மேலும் 31 பேர் விடுவிப்பு

வவுனியா – பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் 31 பேர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். நாவலப்பிட்டிய, கண்டி, மொனராகலை, செவினகலை போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், ...

மேலும்..

இலங்கையில் வளி மாசடைவு வீதம் மீண்டும் அதிகரிப்பு

நாட்டில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர், வளி மாசடைவு வீதம் மீண்டும் உயர் மட்டத்தை அடைந்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பில் தற்போது வளி மாசடைவு தன்மையானது 50 வீதமளவில் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராயச்சி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் ...

மேலும்..

பிளவுபட்ட ரணில் – சஜித் அணிகள்  ஒன்றிணைந்தாலும் தோல்வி உறுதி – மஹிந்த அணி சொல்கின்றது

"பிளவுபட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஒன்றிணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும் மக்கள் ஆணையை இனி ஒருபோதும் பெற முடியாது." - இவ்வாறு மஹிந்த அணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செஹான் சேமசிங்க தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஐக்கிய தேசியக் கட்சியினரும் ஐக்கிய மக்கள் ...

மேலும்..

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 960 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 3 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 960 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உறுதியான 957 பேர் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், ...

மேலும்..

இலங்கையில் கொரோனா 957 – நேற்று 22 பேர் அடையாளம்…

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்று 22 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்றிரவு தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 957 ஆக அதிகரித்துள்ளது. அந்தவகையில், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 957 ...

மேலும்..

மே 20 முதல் போக்குவரத்து திணைக்கள சேவைகள் முற்பதிவு அவசியம்!

எதிர்வரும் மே 20ஆம் திகதி முதல், வரையறைக்குட்பட்ட விதத்தில் தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "கொவிட்-19 வைரஸ்‌ தாக்கம்‌ காரணமாக நாட்டில்‌ ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமைகள்‌ ...

மேலும்..