இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை

கொரோனா தொற்று, நாட்டின் பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளனர். அதற்கமைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நாளை (திங்கட்கிழமை) மாலை ஐந்து மணிக்கு கட்சித் தலைவரும் முன்னாள் ...

மேலும்..

இசைக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு: உதவுமாறு கோரிக்கை!

ஊரடங்குச் சட்டம் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக கோயில்கள் மற்றும் மங்கள விழாக்கள் இடம்பெறாத நிலையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக இசைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட கலைஞர்களின் ஊடக சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. முல்லைத்தீவு உடையார்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் ...

மேலும்..

வாழைச்சேனையில் பல இடங்களில் மணல் கொள்ளை: வாகனங்களுடன் நால்வர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான முறையில் மணல் ஏற்றி வந்த நான்கு உழவு இயந்திரங்களுடன் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், கைது நடவடிக்கை நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றதுடன் மணல் அகழும் வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ...

மேலும்..

538 பேர் இதுவரையில் பூரணமாக குணம்

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் மொத்த எண்ணிக்கை 538 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 18 பேர் குணமடைந்த நிலையிலேயே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் நோயாளிகளாக அடையாளம் காணப்பட்ட 960 பேரில் ...

மேலும்..

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் தார்மீகக் கடமை!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவுகூர வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில், “இந்த நூற்றாண்டின் ...

மேலும்..

அம்பன் புயலின் தாக்கம் – இலங்கையில் பலத்த மழைவீழ்ச்சி

தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம், அம்பன் (AMPHAN) என்ற சூறாவளியாக விருத்தியடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 02.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 610 கி.மீ தூரத்தில், வட அகலாங்கு 1.30 N  இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.10 E  இற்கும் இடையில் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் வளாகத்தை அழகுபடுத்தும் நிகழ்வு….

பாறுக் ஷிஹான் கல்முனை மாநகர சபையின்  வளாகத்தை  அழகுபடுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை  (17) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது. குறித்த வளாகத்தை  அழகுபடுத்தும் திட்டத்தை முன்னிட்டு மாநகர முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஏ. ரக்கீப் ஆலோசனையின் பிரகாரம்  முதற்கட்டமாக  மாநகர வளாகத்தின் இருமருங்கிலும்   மரங்கள் நடப்பட்டன. கல்முனை மாநகர ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டு – 56 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 56326 பேர் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் ஊரடங்கு சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் ...

மேலும்..

வவுனியாவில் வியாபார நிலையத்தில் தீ விபத்து: பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை!

வவுனியா, சிறிராமபுரத்தில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வவுனியா, காத்தார் சின்னக்குளம் வீட்டுத்திட்டம், திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்திருந்த பல்பொருள் வியாபார நிலையமே நேற்று (சனிக்கிழமை) இரவு 8 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த வர்த்தக நிலையம் இரவு ...

மேலும்..

இரட்டிப்பாகும் பொதுத் தேர்தலுக்கான செலவு…!

புதிய சுகாதார வழிகாட்டுதல்களுடன் பொதுத் தேர்தலை நடத்துவது என்றால் சுமார் 14 பில்லியன் ரூபாய் வரை செலவு ஏற்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கணித்துள்ளது. இருப்பினும் இது உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தேர்தல் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் ...

மேலும்..

கிண்ணியாவில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவர் கைது…

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஹேரொயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவரை இன்று(17) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். மஹ்ரூப் நகர்,கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 31,மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிண்ணியா வெள்ளை மணல் ...

மேலும்..

வவுனியாவில் சிறுபோக நெற்செய்கை…

வவுனியாநிருபர். வவுனியா மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெற்செய்கையில் விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுப்பட்டு வருகின்றனர். மாவட்டத்திலுள்ள பெரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு குளங்களின் கீழ் அனுமதிக்கப்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குளத்தின் நீர் மற்றும் மழையினை நம்பி ஆரம்பிக்கப்பட்ட சிறுபோக நெற்செய்கையானது தற்போது ...

மேலும்..

நோர்வூட் பொலிஸ் நிலையத்தால் நோர்வூட் பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்யப்பட்டன…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம்  நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகரப்பகுதியில் உள்ள, பொது இடங்கள் நோர்வூட் பொலிஸாரினால் இன்று (17) காலை முதல் தொற்று நீக்கம் செய்யப்பட்டன. நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.ரணவீர அவர்களின் ஆலோசனைக்கமைய இன்று (17) இந்த தொற்று நீக்கம் நடவடிக்கை ...

மேலும்..

வவுனியா பம்பைமடு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்த 30 பேர் விடுவிப்பு…

வவுனியா, பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 30 பேர் இன்று விடுவிக்கப்பட்டனர். வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் எனப் பலர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அந்தவகையில், வெலிசறை ...

மேலும்..

சவுத் வனராஜா தனியார் தோட்டமக்களுக்கு எந்த வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்க வில்லை. பொது மக்கள் விசனம்…

ஹட்டன் கே.சுந்தரலிங்கம் ஹட்டன் காசல்ரி சவுத்வனராஜா தனியார் தோட்ட மக்களுக்கு எவ்வித நிவாரணமும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. என அத்தோட்டத்தில் வாழும் தோட்டத்தொழிலாளர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கோவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக தொழில் இழந்த வேலையின்றி உள்ள,முதியோர் நோயாளர் கொடுப்பனவு என பல்வேறு கொடுப்பனவுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இக்கொடுப்பனவுகள் ...

மேலும்..